’வணங்கான்’ [vanangaan] பஞ்சாயத்து நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சினைகளோடு நீள ஆரம்பித்திருக்கிறது.
பாலா [bala] – சூர்யாவுக்கு [suriya] இடையே நடந்த ஈகோ பிரச்சினையில் இருவரும் நாசூக்காக ஒதுங்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி என்ற ஒரே காரணத்திற்காகதான கீர்த்தி ஷெட்டி [Keerthi shetty] நடிக்க ஒப்புக் கொண்டார். இப்போது அவர் இப்படத்தில் இருக்கிறாரா என்று விசாரித்தால் அவரும் இல்லை என்று கிசுகிசுக்கிறது படக்குழு.
சூர்யாவுக்கு ஜோடி இல்லை என்ற பிரச்சினை ஒரு பக்கம். அடுத்து இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஆடையில்லாமல் [nude scene] ஒரு காட்சியில் நடிக்க வேண்டுமென பாலா கூறியதாகவும், அதற்கு கீர்த்தி ஷெட்டி தீர்மானமாக மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த இரண்டு விஷயங்களால் கீர்த்தி ஷெட்டி ‘வணங்கான்’ படத்தில் இல்லை என்கிறார்கள்.
இன்னொரு விஷயமும் கோலிவுட் பக்கம் கேட்கிறது. அது ஒரு காட்சியில் சூர்யாவும் அண்டர்வேருடன் [underwear] நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாம். இவ்வளவு வளர்ந்து சமூகத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பிறகு இப்படி நடிக்க முடியாது என சூர்யாவும் மறுத்துவிட்டாராம்.
ஸ்ரீதேவியின் மகளுக்கு இவர் மீதுதான் க்ரஷ்
இன்றைய தேதியில் விஜய் சேதுபதி [vijay sethupathi] தொடர்ந்து ப்ளாப் கொடுத்து வந்தாலும், அவரது சம்பளத்தைப் போல மவுசும் இறங்கியதாக தெரியவில்லை.
திடீரென ஸ்ரீதேவியின் [sridevi] மகளும், கலர் கலர் டிரெஸ்களில் கவர்ச்சியாக போட்டோ எடுத்து இண்டர்நெட்டில் வைரல் ப்யூட்டியாக கொண்டாடப்படும் ஜான்வி கபூர், [Jhanvi kapoor] விஜய் சேதுபதி மீது பாசத்தைக் காட்டியிருக்கிறார்.
‘நானும் ரவுடிதான்’ [nanum rowdythan] படத்தை 100 தடவை பார்த்துட்டேன். ஒரே காரணம். விஜய் சேதுபதி. அந்தளவுக்கு நான் அவரோட தீவிர ரசிகை. அவர் கூட நடிக்க ஆசை. அவர் கூட ஜோடியாக நடிக்க ஆடிஷன் வைச்சாலும் நான் அதுல கூச்சப்படாம கலந்துக்குவேன். எப்படியாவது உங்க கூட சேர்ந்து நடிக்கணும்’ என்று அதிரடியாக சொல்கிறார் ஜான்வி கபூர்.
சமாச்சாரம் வேறொன்றுமில்லை. ஹிந்தியில் ஜான்வி நடித்தப் படங்கள் எதுவும் பெரிதாக எடுப்படவில்லை. அவரது அப்பாவும் தயாரிப்பாளருமான போனி கபூர் மகள்களை இங்கே நடிக்க வைக்க விரும்பவில்லை. வாய்ப்புகள் தேடி வந்தால் அவர்களது விருப்பம் என்று நாசூக்காக கழன்று கொண்டார். இதனால் எப்படியாவது வாய்ப்பை வாங்கிவிட வேண்டுமென ஜான்வி துடிக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தெலுங்கில் பரபரப்பாக இருக்கும் ஜூனியர் என்.டிஆர் [junior ntr] பற்றி ஆஹா ஒஹோ என்று இப்படிதான் ஜான்வி ஸ்டேட்மெண்ட் விட்டார் என்று கண் சிமிட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
ஜப்பானில் அசைக்க முடியாத ரஜினிகாந்த்
இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்திற்கான இலக்கணத்தை மாற்றியமைத்து இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி [rajamouli], தனது ‘ஆர்.ஆர்.ஆர்.’ [RRR] படத்தை ஆஸ்கர் போட்டியில் [Oscar award] எப்படியாவது நுழைத்துவிட வேண்டுமென்ற முயற்சியில் இன்னும் திவீரமாக இருந்து வருகிறார்.
ஏற்கனவே ‘செலோ ஷோ’ [‘Chhello Show’] என்ற குஜராத்தி படம் 2023- ஆஸ்கர் விருதிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வேறு ஏதாவது பிரிவிலாவது ‘ஆர்.ஆர்.ஆர்’ பட த்திற்கு ஒரு விருதை தட்டிவிட வேண்டுமென ராஜமெளலி விரும்புகிறாராம்.
இந்த முயற்சி ஒரு பக்கமிருக்க, ஜப்பானில் அக்டோபர் 21-ம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை வெளியிட்டார்கள். அங்கு இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 300 மில்லியன் ஜப்பானிஸ் யென் வசூல் [jyp 300 million club] செய்திருக்கிறது. மிக துரிதமாக இந்த வசூல் இலக்கை எட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமையை ‘ஆர்.ஆர்.ஆர்’ எட்டியிருக்கிறது.
இப்படம் வெளியான 40 நாட்களில் 305 மில்லியன் ஜப்பானிய யென்களை கலெக்ஷன் செய்திருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி
இப்படி ஒரு ரிக்கார்டை ‘ஆர்.ஆர்.ஆர்’ உருவாக்கினாலும் ஜப்பானில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது நம்மூர் ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம்.
’முத்து’ [muthu] படம் 400 மில்லியன் ஜப்பானிய யென்களை வசூல் செய்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 22 கோடி.