No menu items!

காஜல் அகர்வாலின் புது ரூட்!

காஜல் அகர்வாலின் புது ரூட்!

மார்க்கெட் இருக்கும் போது பரபரப்பாக நடிக்கும் நடிகைகள்,  வாய்ப்புகள் வருவது குறைந்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவதுதான் வழக்கம். பிறகு குழந்தை பிறந்து, வீட்டுக்குள் தங்களை சுற்றி யாரும் இல்லாத வெறுமையில் சலிப்பு தட்டும் போது அவர்கள் மீண்டும் சினிமாவுக்குள் வருவது வாடிக்கை.

ஆனால் காஜல் அகர்வால் விஷயத்தில் இது கொஞ்சம் வேறு மாதிரியாக அமைந்திருக்கிறது.

வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததுமே த்ரிஷா, அனுஷ்கா மாதிரி திருமணத்தை இழுத்தடிக்காமல் பட்டென்று திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தையும் பெற்று கொண்டார்.

குழந்தையைக் கவனிக்கப் போகிறேன் என்ற காஜல் அகர்வாலை, இந்தியன் மனம் மாற வைத்துவிட்டார்.

வருமா வராதா என்ற குழப்பத்தில் இருந்த ’இந்தியன் 2’ மீண்டும் உயிர்ப்பெறவே, காஜல்தான் ஹீரோயின் என்றும் உறுதிப்படுத்திவிட்டார்கள்.

அவ்வளவுதான். குழந்தையை தனது அம்மா கவனிப்பில் விட்டுவிட்டு ஸ்டூடியோ பக்கம் வந்துவிட்டார் காஜல் அகர்வால். ஆனால் ’இந்தியன் 2’ தவிர மற்ற ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதேபோன்ற பிரச்சினைகளை சமாளித்து வரும் அனுஷ்கா ‘அருந்ததீ’, ‘பாகமதி’ படங்களில் நடித்தது போல், அடுத்து சமந்தா ‘யசோதா’விலும், கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்திலும், ராஷ்மிகா மந்தனா ‘ரெயின்போ’ மற்றும் ’த கேர்ல் ஃப்ரெண்ட்’ ஆகிய படங்களிலும் நடிப்பதைப் போல் நடிக்கும் புதிய பாதையைப்  பிடித்திருக்கிறார்.

இதனால் மனம் நொடித்துப் போகாமல், இப்போது கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளாக தேடிப்பிடித்து கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

’கோஸ்ட்டி’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அது எடுப்படவில்லை. இப்போது தெலுங்கில் ‘சத்யபாமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வகையறா படங்களில் நடிக்க கூடுதல் கால்ஷீட், சம்பளத்தில் கெடுபிடி இல்லை என்று சிறப்பு சலுகைகளையும் காஜல் அகர்வால் அள்ளிவிடுகிறாராம்.


’தளபதி 68’

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகப் பெயராக ‘தளபதி 68’ என்று வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் ஷெட்யூலை தாய்லாந்தில் வைத்திருந்தார்கள். தாய்லாந்தில் டூயட் எடுக்காமல், ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்துவிட்டு நல்லப்பிள்ளைகளாக திரும்பியிருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இப்போது சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் இரண்டாவது ஷெட்யூலை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காகவே பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இருக்கிறதாம்.

இங்கு விஜய் மற்றும் கதாநாயகியாக நடிக்கும்  மீனாட்சி செளத்ரி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தில் விஜய் தனது தலைமுடியை பழைய பாணியில் வைத்திருக்கும் வகையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் சமீபகாலமாக,  விஜயின் ஹேர் ஸ்டைல் சமூக ஊடகங்களில் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கிண்டலடித்தும் வருகிறார்கள்.

இந்த உருவக்கேலியானது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது என்றாலும் யாரும் அது குறித்து வருத்தப்படுவதாக தெரியவில்லை. இந்த பிரச்சினையை சமாளிக்க ஹேர் ஸ்டைலில்  இந்த முறை தேவையில்லாத பஞ்சாயத்துகளை கூட்ட போவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...