No menu items!

விஜய் அஜித் மோதல் ஆரோக்யமானதா?

விஜய் அஜித் மோதல் ஆரோக்யமானதா?

எறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கோலிவுட்டில் கடும் யுத்தம்.

தலயும் தளபதியும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள்.

ஒரு பக்கம் ’துணிவு’. மறுபக்கம் ’வாரிசு.’.

இரண்டுப் பேரும் பாக்ஸ் ஆபீஸை தீர்மானிக்கும் கமர்ஷியல் ஹீரோக்கள் என்பதால் இந்த இரு படங்களுக்கும் திரையரங்குகளைப் பிடிப்பதில் திரையரங்கு உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி நேரத்தில் திரையரங்குகள் ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால் ரசிகர்கள் எந்த திரையரங்குகளில் தங்களது ஹீரோவின் படம் வருகிறது. டிக்கெட் எப்போது கைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இரு படங்களும் அதிகாலை காட்சிகளாக திரையிடப்பட இருப்பதால் கொஞ்சம் பதற்றம் நிலவுகிறது. படம் சரியில்லை என்றாலோ அல்லது டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலோ ரசிகர்கள் ரகளையில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் கொஞ்சம் பதற்றத்தில்தான் இருக்கிறார்கள்.
’துணிவு’ சென்னையில் அதிகாலை ஒரு மணி காட்சியில் திரையிடப்படுவது உறுதியாகி விட்டது.

சென்னையின் முக்கிய இடங்களில் இருக்கும் திரையரங்குகளில் டிக்கெட்களூக்காக அஜித்தின் ரசிகர்கள் முற்றுகையிட்டு வருகிறார்கள்.

‘வாரிசு’ அதிகாலை 4 மணி காட்சியில் இருந்து ஆரம்பமாகிறது. இதைக் கேள்விப்பட்டு கடுப்பான விஜய் ரசிகர்கள் தங்களது ஹீரோவின் படமும் அதிகாலை 1 மணி காட்சியில் திரையிடப்பட படவேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சிறப்புக்காட்சிகள் தொடர்பான பிரச்சினை ஒருவழியாக சுமூகமாக முடிவடைந்த நிலையில் தற்போது இந்த இரு ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இடையில் மீண்டுமொரு சர்ச்சை வெடித்திருக்கிறது.

சென்னையில் ’துணிவு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், ’வாரிசு’ படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்திருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ’வாரிசு’ படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு படங்களையும் ரெட் ஜெயிண்ட் மூவி தான் வெளியிடுகிறது. அஜித்திற்கு ரசிகர் மன்றங்கள் இல்லை, ஆனால் விஜய் மக்கள் மன்றம் மூலமாக ’வாரிசு’ பட டிக்கெட்கள் அதிகம் விற்பதாகவும் அதனால் தான் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் விநியோகிஸ்தர் உதயநிதி இரு படங்களுக்கும் சமமான திரையரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். எதுவாக இருந்தாலும் முதல் நாள் இரண்டு படங்களும் வெளியான பிறகு மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பொருத்தே, எந்த படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் வழக்கம் போல் போட்டி முதல் நாள் கொண்டாட்டத்தில் பாலபிஷேகம், பட்டாசு, இனிப்பு, தாரை தப்பட்டை என போட்டி நிலவுவதோடு மட்டுமல்லாமல் அடிதடியில் முடியவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரே நாளில் இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால், ரசிகர்களுக்கு மட்டுமே கொண்டாட்டம். ஆனால் தமிழ் சினிமா உலகிற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயில் அதிக இழப்பு ஏற்படும். ஒரு சில நாட்கள் இடைவெளி விட்டு படங்களை திரையிட்டால், அனைத்து தரப்பு மக்களும் சென்று பார்க்கும் சூழல் நிலவும். இரு ஹீரோக்களுக்குமான பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனும் அதிகமிருக்கும். திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கும் வருவாய் கிடைக்கும். ஆனால் அதை நடிகர்களுக்கிடையே இருக்கும் போட்டியை வைத்து இப்படி கொம்பு சீவி விடுவது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இனியும் இதே போன்ற போட்டி வேண்டாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் சங்கராந்திக்கு பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி என இரு பெரும் ஸ்டார்களின் படங்களும் வெளியாகின்றன. முதலில் பாலகிருஷ்ணா படமும் ஒரு நாள் இடைவெளிவிட்டு சிரஞ்சீவி படமும் வெளியாகிறது. கலெக்‌ஷன் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் இதற்கு ஒரே காரணம். இது போல் தெலுங்கு ஹீரோக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருவதால்தான் தெலுங்கு சினிமா இன்னும் செழிப்பாக இருக்கிறது என்ற முணுமுணுப்பு இங்கு எழுந்திருக்கிறது.

ரசிகர்களை சினிமாவையும் காப்பாற்ற இந்த பொங்கலுக்கு நடக்கும் மோதல் மாதிரியான செயலில் பெரிய நடிகர்கள் ஈடுபடக்கூடாது என்பதே பல தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...