No menu items!

உற்சாகத்தில் இந்திய சினிமா – களை கட்டிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

உற்சாகத்தில் இந்திய சினிமா – களை கட்டிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

கோவிட் [covid] உலகத்தை உலுக்கியதோ இல்லையோ. இந்திய சினிமாவை ரொம்பவே பதம்பார்த்துவிட்டது. பொது முடக்கத்தில் இந்திய சினிமாவும் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போனது.

இந்நிலையில் இப்போது இந்திய சினிமா [Indian Cinema] கொஞ்சம் கொஞ்சமாக பாக்ஸ் ஆபீஸில் தேறிவருகிறது. காரணம் சமீபத்தில் வெளியான சில படங்கள். குறிப்பாக பான் இந்தியப்படங்கள் [Pan India Films] வசூலில் நம்பிக்கை அளித்திருக்கின்றன.

அந்த வரிசையில் ’கேஜிஎஃப்-2’ [KGF 2], ’காந்தாரா’ [Kantara], ’ஆர்,ஆர்.ஆர்’ [RRR]. ’விக்ரம் [Vikram], ;பிரம்மாஸ்திரா [Pramahastra], ’காஷ்மீர் ஃபைல்ஸ்’ [Kashmir Files] உள்ளிட்ட படங்கள் அடங்கும்.

பொதுவாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை Gross, Nett அல்லது Share இவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் கணக்கிடுவது வழக்கம். இந்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனானது Gross Box Office-ஐ அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் அக்டோபர் 2022-ல் வெளியான படங்கள் தமிழ் [Tamil], தெலுங்கு {Telugu], மலையாளம் {Malayalam], ஹிந்தி [Hindi] என பல மொழிகளில் வசூல் செய்த கலெக்‌ஷனை அடிப்படையாக கொண்டிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். இவை அனைத்து இந்திய அளவிலான வசூலைக் குறிக்கின்றன.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் [Box Office] குறிப்பிடப்பட்டிருக்கும் சில படங்கள் இப்பொழுதும் கூட திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு ‘பொன்னியின் செல்வன்’ [Ponniyin Selvan], ‘காந்தாரா’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம். அதனால் தற்போதுள்ள வசூல் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

சில படங்கள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான மாதங்களுக்கு முன்பாகவே திரையரங்குகளில் வெளியாகி இருக்கலாம். உதாரணத்திற்கு தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம். இப்படம் மார்ச்சில் வெளியாகி இருந்தாலும் ஏப்ரல் மாதத்திலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததால், அப்படத்தின் மொத்த வசூலானது மார்ச் மாதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான இந்திய பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அக்டோபர் 2022 மாத பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை பார்க்கலாம்.

அக்டோபர் மாத இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் கொடி கட்டி பறக்கிறது ‘காந்தாரா’.

இந்திய பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரை அக்டோபர் மாதம் வெளியான படங்கள் இதுவரை ஏறக்குறைய 775 கோடிகளை மொத்த வசூலாக பெற்றிருக்கின்றன.

இதில் கன்னடப் படமான ’காந்தாரா’ கர்நாடகாவில் மட்டும் செப்டெம்பரில் வெளியிடப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பினால் பின்னர் இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என இதர பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் காந்தாராவின் வசூல் செப்டெம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களில் பெற்ற வசூலை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 2022-ல் வெளியான படங்களில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக்குவித்த டாப் 10 படங்களின் பட்டியலில் ’சர்தார் [Sardar]’, ‘ப்ரின்ஸ்’ [Prince], ‘காந்தாரா’, ‘ப்ளாக் ஆடம்’ [Black Adam], ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ [Jaya Jaya1Jaya Jaya Hey], ‘காட்ஃபாதர்’ [Godfather], ‘ராம் சேட்டு’ {Ram Settu], ‘தேங்க் காட்’ [Thank God], ‘டாக்டர் ஜி’ [Doctor G], ‘காந்ததா குட்தி’ ஆகியப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த டாப் 10 பட்டியலில் [Top 10] முதலிடத்தை ‘காந்தாரா’ பிடித்திருக்கிறது. இப்படம் வசூலித்த தொகை ஏறக்குறைய 345 கோடிகள். 200 கோடி வசூல் என்ற இலக்கை கடந்திருக்கும் ஒரே படம். இதன் ஒட்டுமொத்த கலெக்‌ஷன் சுமார் 345 கோடி. இதில் 47% வசூல் கர்நாடகாவிலிருந்தும், மீதமுள்ள 53% கலெக்‌ஷன் இதர மொழிகளிலிருந்தும் வசூல் ஆகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹிந்தியில் இருந்து அதிகம் கிடைத்திருக்கிறது.

இதற்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்திருக்கும் படம் ஜெயம் ராஜா இயக்கிய தெலுங்குப்படமான ‘காட் ஃபாதர்’. இதன் வசூல் 87 முதல் 89 கோடிகள்.

மூன்றாவது இடத்தை ‘ராம் சேட்டு’ படம் 87 முதல் 88 கோடி வசூலைப் பெற்றிருக்கிறது.

கார்த்தி நடித்திருக்கும் தமிழ்ப் படமான ‘சர்தார்’ 69 கோடிகளையும், இதையடுத்து ‘ப்ளாக் ஆடம்’ படம் 58 முதல் 59 கோடியையும் கல்லா கட்டியிருக்கின்றன.

ஆறாவது இடத்தை 38 முதல் 39 கோடி வசூலுடன் ‘தேங்க் காட்’ படம் பிடித்திருக்கிறது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ படம் தோராயமாக 34 முதல் 36 கோடி வசூலித்திருக்கிறது.

எட்டாவது இடத்தை ’டாக்டர் ஜி’ படம் ஏறக்குறைய 30 கோடியை வசூல் செய்திருப்பதன் மூலம் பிடித்திருக்கிறது.

யாரும் எதிர்பாராத வகையில் மலையாளப் படமான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ இப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் வசூல் ஏறக்குறைய 23 கோடிகள்.

பத்தாவது இடத்தை ‘கந்ததா குட்தி’ 23 கோடியை வசூலித்திருப்பது மூலம் எட்டியிருக்கிறது.

மேற்கூறியது அக்டோபர் 2022 நிலவரம் மட்டுமே.

இந்தாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9,030 கோடியைத் தொட்டிருக்கிறது. இதில் நவம்பர், டிசம்பர் மாத வசூலையும் சேர்க்கும் போதுதான் 2022-ம் ஆண்டிற்கான மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூலைக் கணக்கிடமுடியும்.

கோவிட் காலத்தில் திரையரங்குகள் பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டிருந்ததால் 2019-ம் ஆண்டின் வசூல் மட்டும் சொல்லிக்கொள்கிற மாதிரி இருக்கிறது. 2019-ம் ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஏறக்குறைய 10,950 கோடிகள்.

இந்த இலக்க முறியடிக்க நவம்பர் மட்டும் டிசம்பரில் வெளியாகும் படங்கள் குறைந்தப்பட்சம் 1,931 கோடி வசூலை குவிக்க வேண்டும்.

அக்டோபர் மாத பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை தாண்டி கவனத்தை ஈர்த்திருக்கும் சில முக்கிய அம்சங்கள். இதில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இந்திய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் இந்தாண்டு ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களின் டப் செய்யப்பட்ட படங்கள் 37% பங்களிப்பை கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த முதல் மூன்றுப் படங்கள் ‘கே.ஜி.எஃப். 2’, ‘ஆர்.ஆர்.ஆர்’ அடுத்து ‘காந்தாரா’.

தமிழ்ப் படமான ‘பொன்னியின் செல்வன்’ ஏறக்குறைய 320 கோடி வசூலுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கவந்து ஒரு அதிர்வை உருவாக்கி இருக்கும் கமல் ஹாஸன் [Kamal] நடித்த ‘விக்ரம்’ படம் ஏறக்குறைய 283 கோடி வசூலுடன் ஏழாவது இடத்தை எட்டியிருக்கிறது.

விஜயின் ‘பீஸ்ட்’ [Beast] ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் தோராயமாக 165 கோடிகள்.

இந்த வகையில் இந்தாண்டின் [ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில்] இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலில் மூன்று தமிழ்ப்படங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்திருப்பது இந்திய சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் வழக்கமான கதைக்களம் இல்லாமல் புதுமையான, ரசிக்க வைக்கும் அம்சங்கள் இருந்தால் ரசிகர்கள் அதைக் கொண்டாட தவறுவது இல்லை என்பதை பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பிரதிபலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...