No menu items!

இந்தியன் 2 – தள்ளிப் போகிறதா ரிலீஸ்?

இந்தியன் 2 – தள்ளிப் போகிறதா ரிலீஸ்?

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் தயாரிக்க எடுத்துக் கொள்ளப்படும் நாட்கள் அதிகபட்சமாக 6 மாதங்களாக இருக்கும். அதற்கும் மேலாக ஒரு சில மாதங்கள் அதிகரிக்கலாம். ஆனால் வருடக்கணக்கில் தயாரிப்பில் இருந்த திரைப்படம் என்றால் அது இந்தியன் 2 திரைப்படம்தான். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 1996ம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனோடு கவுண்டமணி நெடுமுடி வேணு சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். பாடல்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்று படத்திற்கு பலமாக இருந்தது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிய இந்தப்படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக பிரமாண்டமான தயாரிப்பு செலவை செய்ய லைகா நிறுவனம் முன் வந்ததால் கமல்ஹாசனும் நடிக்க சம்மதித்தார். 2018ல் இதற்கான பணிகளில் இறங்கி படப்பிட்ப்ப்பை தொடங்கினார் இயக்குனர் ஷங்கர். ஆனால் இன்று 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது இந்தியன் 2 படக்குழு. விபத்து ஏற்பட்டு அதில் பலியான உயிர்கள். அதில் தடைபட்ட படப்பிடிப்புகள். அதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு அதிலும் தாமதம், கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி, விக்ரம் படம் என்று பல முறை தள்ளிப்போனது. இந்த நேரத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா மீது அமலாக்கத்துறை ரெய்டு நடந்து பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது.

இதற்கிடையில் விவேக், நெடுமுடி வேணு ஆகியோரின் எதிர்பாராத மரணம், கொரோனா என்று பல இன்னல்களை சந்தித்தது படம். இறுதியாக கடந்த ஆண்டு முழு வீச்சில் தயாரான படக்குழு அனைத்துப் பணிகளையும் போர்க்கால அவசரத்தில் செய்து முடித்தது. சமீபத்தில் பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்தது. ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் வெளியாக இருந்த சில படங்களில் வெளியீட்டையே தள்ளி வைத்தனர். அதில் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் என்ற திரைப்படமும் ஒன்று.

இந்தியன் 2 படத்தைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தகவல் வெ:ளியாகியிருக்கிறது. இந்தியன் 2 இந்த மாதம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போகிறது. படத்தின் ஒரு பாடல் காட்சியை ஷங்கர் தான் நினைத்தது போல எடுக்க முடியவில்லை என்பதால் மீண்டும் அந்தப் பாடலை எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் இந்த தாமதம் என்கிறார்கள்.

ஜூலை மாதம் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்தியன் 2 படத்தினால் நிறுத்தப்பட்டிருந்த படங்கள் இப்போது வெளியாக தயார் செய்யப்படுகிறது. தனுஷின் ராயன் படத்தையும் இந்த மாதத்தில் வெளியிட வேலைகள் நடக்கின்றன.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிக ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் என்றால் ஆபவாணன் தயாரிப்பில் இணைந்த கைகள் திரைப்படம் மட்டும்தான் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் போதுமான லாபத்தைக் கொடுக்கவில்லை.

இந்தியன் 2 படத்திற்கு அது போல் இல்லாமல் லாபத்தை சந்திக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...