No menu items!

’இந்தியன் 2’ – எடிட்டர் ஆன கமல்ஹாஸன்!!

’இந்தியன் 2’ – எடிட்டர் ஆன கமல்ஹாஸன்!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலும், ஷங்கரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

எடிட்டிங் வேலையை ஆரம்பித்த பிறகுதான், இந்தியன் 2 படத்தின் நீளம் சுமார் 5 மணி நேரம் ஓடும் வகையில் இருக்கிறதாம். உலகில் எந்தவொரு திரைப்படமும் ஒரு காட்சியாக 5 மணி நேரம் ஓடியதாக வரலாறு இல்லை.

5 மணிநேர படத்தை இரண்டாக பிரித்து, இரண்டுப் பாகங்களாக வெளியிடலாமா என்று ஆரம்பத்தில் யோசித்திருக்கிறார்கள்.

ஆனால் கமல் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். என்னவாலும் சரி ஒரு பாகமாக வெளியிட்டால்தான் படத்திற்கான மவுசு இருக்கும். அதனால் படத்தை எடிட்டிங்கில் மூன்று மணிநேர படமாக செதுக்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கிறது.

இந்நிலையில் ஷங்கர் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால், எடிட்டிங்கை வேலைகளை கமல் மேற்பார்வையிட இருப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது.

ஷங்கருக்குப் பதிலாக கமல் எடிட்டிங்கில் உட்கார்ந்து எடிட் பண்ணும் வேலைகளைப் பார்த்து வருவதாகவும் இந்தியன் 2 படக்குழு வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

இப்படியொரு நிலை இருந்தால் கமல் எந்த காட்சிகளை நீக்குவார், படத்தை நீளத்தைக் குறைக்க என்ன செய்ய போகிறார் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரியவரும்.


அமலா பாலிடம் விவாகரத்து கேட்கும் காதலர்!

இளையதலைமுறை நடிகைகளில் ரொம்பவே வித்தியாசமானவர் அமலா பால். மனம் விரும்பும் இடங்களுக்கு ஒரு ஜிப்ஸியை போல் ரவுண்ட் அடிப்பார். களி மண்ணில் பானை செய்வது, அலங்காரப் பொருட்கள் செய்வது என பொழுதைக் கழிப்பார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் உடனான திருமண முறிவுக்குப் பின்னர் பவ்னிந்தர் சிங் என்பவருடன் அமலா பால் டேட்டிங்கில் இருந்தார் என்ற கிசுகிசு கிளம்பியது.

ஆரம்பத்தில் இதை அமலா பால் மறுத்தாலும், பவ்னிந்தர் சிங் எனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டது என புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைப் பார்த்த அமலா பால், இந்த புகைப்படங்கள் ஒரு போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை. அதை வைத்து பவ்னிந்தர் சிங் விளம்பரம் தேட முயற்சிக்கிறார் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் பவ்னிந்தர் சிங் மீது விழுப்புரத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். இதனால் பவ்னிந்தர் சிங் சில நாட்கள் காவல்துறையின் வசம் சிறையில் இருந்தார்.

இப்போது பவ்னிந்தர் சிங் அமலா பாலிடம் விவாகரத்து கேட்கிறாராம். ஆனால் அமலா பால் தரப்போ அவர்களுக்குள் திருமணம் நடக்கவே இல்லை. அப்புறம் எப்படி விவாகரத்து கொடுக்க முடியும் என பிரச்சினையை முடிக்க மும்முரமாக இருக்கிறதாம்.

விவாகரத்து கொடுத்தால், அது சட்டப்படி திருமணம் செய்தது போல் ஆகிவிடும் என்பதால் அமலா பால் தரப்பு பெரிய இடத்தில் ஆதரவு கேட்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.


8 மடங்காக எகிறிய ’காந்தாரா 2’ பட்ஜெட்!!

யாரும் எதிர்பாராத வகையில் இந்திய சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்திய கன்னடப்படம் ‘காந்தாரா’.

16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ஏறக்குறைய 400 கோடி வரை பெரும் வசூலைக் குவித்ததால், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார் அப்படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டி.

’கேஜிஎஃப்’ வரிசை படங்களை எடுத்த ஹொம்பளே ஃப்லிம்ஸ்தான் ‘காந்தாரா 2’-வையும் தயாரிக்க இருக்கிறது. பான் இந்திய படமாக காந்தாரா கொண்டாடப்பட்டதால், எளிதில் வியாபாரம் செய்துவிடலாம் என திட்டமிட்டு வருகிறது ஹொம்பளே ஃப்லிம்ஸ்.

இதனால் ’காந்தாரா 2’ 125 கோடி செலவில் எடுக்கும் வகையில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட ஏறக்குறைய எட்டு மடங்கு பட்ஜெட் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘காந்தாரா 2’ படமானது முதலில் வெளிவந்த காந்தாராவின் ப்ரிக்குவல் படமாக இருக்குமாம். அதாவது துளு பகுதியில் பஞ்ஜுரில் தெய்வம் எப்படி முக்கியத்துவம் பெற்றது. அதன் ஆரம்பம் எப்படி உருவானது என்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த முறை கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஒரே தேதியில் வெளியிடவும் ரிஷப் ஷெட்டி தயாராகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...