No menu items!

என்னாலேயே குடும்பத்தோடு பார்க்க முடியல – தமன்னா!

என்னாலேயே குடும்பத்தோடு பார்க்க முடியல – தமன்னா!

கடந்த வாரம் வரை செம எதிர்பார்பை கிளப்பிய வெப் சிரீஸ் ‘லஸ்ட் சிரீஸ் 2’.

இதற்கு ஒரே காரணம்தான்.

சினிமாவுக்குள் இருக்கும் இந்த 18 ஆண்டுகளில், இதழ் முத்தமோ அல்லது மிக நெருக்கமாக இருக்கும் காட்சியிலோ தமன்னா நடித்ததே இல்லை. ஆனால் தனது கட்டுக்கோப்பான அந்த கவர்ச்சி பாலிசியை இந்த வெப் சிரீஸூக்காக தமன்னா விட்டுக்கொடுத்துவிட்டார். இதற்கு காரணம் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் தமன்னாவின் ஆண் நண்பர் விஜய் வர்மா. இதுவே எக்கச்சக்கமான எதிர்பார்பை கிளப்பிவிட்டது.

ஒரு வழியாக அந்த வெப்சிரீஸூம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிவிட்டது.

இதைப் பார்த்தவர்கள் இதற்கு முன்பு வெளியான ‘லஸ்ட் சிரீஸ்’ உடன் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தமன்னா நடித்திருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ அந்தளவிற்கு இல்லை. இதற்கு முந்தையது எவ்வளவோ மேல் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை தனது வாயைத் திறக்காமல் அமைதி காத்துவந்த தமன்னா, ‘’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’-ஐ என்னோட குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே தர்மசங்கடமா இருந்துச்சு. இந்த வெப் சிரீஸ்ஸில் என்னைக் காட்டிய விதம் இப்போது விவாதத்தை கிளப்பி இருக்கு. அதேநேரம் என்னோட ரசிகர்களோட எதிர்பார்ப்பையும் மீறி அமைஞ்சிருப்பது உண்மைதான். அந்தக் காட்சிகள்ல நடிக்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. ஆனா ஒரு நடிகையா என்னோட நடிப்புத்தொழில் கேட்கிறதை பண்ணனும், சவால்களை சமாளிச்சுதான் ஆகணும். அதைதான் நானும் பண்ணினேன்’ என்று வெளிப்படையாக மனம் திறந்து இருக்கிறார் தமன்னா.


முத்தம் கொடுத்தா கணவருக்கு பதில் சொல்லணுமே -ப்ரியாமணி

ப்ரியா மணி திடீரென பெரும் பாய்ச்சலோடு பேசியிருக்கிறார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது.

திருமணம் ஆனப்பிறகும் நடித்துவரும் ப்ரியா மணி, ஷாரூக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடியிருப்பார். மற்றபடி கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வருகிறார். இதற்கான காரணத்தை இப்போதுதான் போட்டு உடைத்திருக்கிறார் ப்ரியாமணி.
’நான் கண்டிப்பாக சினிமாவுல முத்தம் கொடுக்குற மாதிரி நடிக்கவே மாட்டேன். அதுல உறுதியா இருக்கேன். நடிப்பு என்னோட தொழில், என்னோட கதாபாத்திரத்திற்கு தேவை என்பதை நான் நன்றாகவே புரிஞ்சு வைச்சிருக்கேன். ஆனால் தனிப்பட்ட முறையில பார்த்தால் முத்தம் கொடுக்குற மாதிரி நடிக்குறது எனக்கு செளகரியமா இல்ல. அப்படி நடிச்சா நான் என்னோட கணவருக்கு பதில் சொல்லி ஆகணும்.

கன்னத்துல முத்தம் கொடுக்கிறத தாண்டி நெருக்கமாக நடிக்க என்னால முடியாது. என்னை தேடிவந்த பல வாய்ப்புகள்ல இப்படி நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகள் அதிகம் இருந்தன. ஆனா நான் என செட்டாகாது என சொல்லிட்டேன்.

நான் நடிச்சதை என்னோட குடும்பமும் பார்க்கும், என் கணவரோட குடும்பலத்தியும் பார்ப்பாங்க. நடிப்பு என்னோட தொழிங்கிறது அவங்க எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நான் தர்மசங்கடமா நினைக்கிறது விரும்பல. என்னோட குடும்பத்தினரை தேவையில்லாம யோசிக்க வைக்கவிரும்பல. என் மருமகள் கல்யாணம் ஆனப்பின்னாடியும் ஏன் இப்படி நடிச்சிருக்கான்னு என்னோட மாமியாரை யோசிக்க வைக்க நான் விரும்பல. அதனால் இப்படிப்பட்ட காட்சிகள்ல நடிக்கிறதா அல்லது வேண்டாமா என்பது நம்மளோட தனிப்பட்ட விரும்பம்தான்’ என்று ப்ரியா மணி வெளுத்து வாங்கியிருக்கிறார்.


தனுஷுக்கு தடையா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு அடிக்கடி வரும்.
அந்த மாதிரியான நேரத்தில், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பட்டென்று ஒரு அறிவிக்கை வெளிவரும். அடுத்து ஆளாளுக்கு பேட்டி கொடுப்பார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த சங்கமும் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல அமைதியாகிவிடும்.

இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புது நிர்வாகிகள் பொறுப்பேற்று விட்டார்கள். அதனால் அமைதியைக் கலைக்கும் நேரமாக இருக்கிறது.

தலைவராக இருக்கும் தேனாண்டாள் ப்லிம்ஸின் முரளி மற்றும் சங்க நிர்வாகிகள், ‘சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, விஷால், அதர்வா, யோகி பாபு’ என நடிகர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார்கள். இந்த நடிகர்கள் ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தயாரிப்பாளர்களிடம் சொன்ன மாதிரி நடித்து கொடுக்கவில்லை. அதனால் அவர்களுக்கு ரெட் கார்ட் போடுவதாகவும், அவர்களுக்கு இனி தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்காது’ என்று அறிவித்தார்கள்.

இந்நிலையில், தனுஷூக்கும் தடை விதிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என தகவல். தனுஷூக்கு எதிராக களத்தில் இறங்கி இருப்பது தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி.

தனுஷ் வாக்கு கொடுத்த மாதிரி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் முரளி.

இதனால் தனுஷூக்கும் ரெட் கார்ட் போடலாம் என சில தயாரிப்பாளர்கள் வேகம் காட்டுகிறார்களாம். அவர்கள் நினைத்தபடியே ரெட் கார்ட் போட முடியாது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

காரணம் தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் டி50 படத்தை தயாரிக்க போவது ஒரு முக்கிய தொலைக்காட்சியின் தயாரிப்பு நிறுவனம்தான். அவர்கள் படத்தில் நடிக்க தடை என்று எப்படி சொல்லமுடியும்? அப்படியே தடை போட்டாலும், அந்த தடையைப் போட்ட வேகத்திலேயே திரும்பி பெற்றுவிடுவார்கள் என்கிறார்கள்.

அதேபோல் எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு இவர்கள் இருவரும் ரஜினி, விஜய் என முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்கள். அதனால் அந்தப்படங்கள் முடியும் வரை அவர்களுக்கு தடை போட வாய்ப்பில்லை.

அதனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்களை விட்டுவிட்டு, அப்பாவி நட்சத்திரங்களை பலிக்கடா ஆக்கிவிடுவார்கள் என முணுமுணுக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...