No menu items!

’லியோ’ முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும்?

’லியோ’ முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும்?

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ படம் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

’மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி, பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருப்பது, வியாபாரத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் தீனிப்போடும் வகையிலான விளம்பர யுக்திகள், ரஜினி சொன்ன காகம் – பருந்து கதையில் யார் காகம் யார் பருந்து என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும் சமூக ஊடகங்கள் இப்படி எதிர்பார்ப்பை எகிறவிடும் காரணங்கள் பல இருக்கின்றன.

‘லியோ’ படம் வெளியாவதற்கு முன்னதாகவே சுமார் 400 கோடிக்கும் மேல் வியாபாரமாகி இருப்பதாக ஒரு தகவல் கோலிவுட் வியாபார வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஒடிடி உரிமை 70 கோடிக்கும் மேல் வியாபாரமாகி இருக்கிறது. திரையரங்கு உரிமையும் 100 கோடியைத் தொட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் முதல் நாள் வசூல் 100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூறு கோடி இலக்கை எட்ட வேண்டுமென்றால் அதிகாலை காட்சிகள் அவசியம். சிறப்புகாட்சிகள் இல்லாமலேயே 100 கோடியை எட்டும் பட்சத்தில் விஜயின் லியோ ஒரு புது சாதனையைப் படைக்கும்.


தனுஷூடன் கைக்கோர்க்கும் ராஷ்மிகா!

’நேஷனல் க்ரஷ்’ என கொண்டாடப்பட்டாலும், ராஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட் எண்ட்ரீ வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் ராஷ்மிகா அடுத்துவரவிருக்கும் ‘அனிமல்’ படத்தை அதிகம் நம்பியிருக்கிறாராம்.

ஹிந்தி சினிமா எந்தளவிற்கு கைக்கொடுக்கும் என்பது புரியாத புதிராக இருப்பதால், இருப்பதை தக்கவைத்து கொள்ள ஆசைப்படுகிறாராம் ராஷ்மிகா.

அதாவது தமிழ், தெலுங்கு இந்த இரண்டு மொழிகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாலே போதும் என தனது கால்ஷீட் மேனேஜரிடம் சொல்லியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இதனால் அவரது கால்ஷீட் மேனேஜர் இப்போது சென்னை, ஹைதராபாத் பக்கம் அதிகம் வலம் வருகிறாராம்.

ராஷ்மிகாவின் இந்த யுக்திக்கு ஒரளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நடிப்பில் வெளுத்து வாங்கும் நடிகைகள் அல்லது கவர்ச்சியில் தூள் கிளப்பும் நடிகைகளை தேர்ந்தெடுக்கும் தனுஷ், இப்போது ராஷ்மிகாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

தனுஷ் அடுத்து நடிக்கவிருக்கும் தமிழ் மற்றும் தெலுங்குப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஓகே என சொல்ல, அப்பட இயக்குநர் சேகர் கம்முலா உடனடியாக ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ராஷ்மிகா இன்னும் சில வாரங்களில், ‘’வாரிசு’ படப்பூஜையின் போது, ’விஜயுடன் நடிப்பதால் என் கனவு நிறைவேறியது’ என்று சொன்னதைப் போலவே, தனுஷூடன் நடிப்பதால் என் கனவு நிறைவேறியது என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

முன்னணி நடிகர்களுடன் முதல் முறை ஜோடி சேர்ந்து நடிக்கும் போதெல்லாம், இப்படியொரு டயலாக் டெம்ப்ளேட்டை ராஷ்மிகா பயன்படுத்தி வருகிறார். அதைத்தான் இப்படி கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள்.


சூர்யா பட பட்ஜெட் 500 கோடி!

சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் ’கங்குவா’ படத்தின் மூலம் பான் – இந்திய நடிகராக தன்னை முன்னெடுப்பதில் முனைப்பாக இருக்கிறார். ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாவதால், இந்தியா முழுவதிலும் ஒரே நாளில் சென்றடைந்து விடலாம் என சூர்யா தரப்பு தீவிரமாகி இருக்கிறது.

இந்தப் படத்திற்கு பிறகு ’சூரரைப் போற்று’ இயக்கிய சுதா கோங்க்ராவின் படம், அடுத்து வெற்றி மாறனின் ‘வாடிவாசல்’ என இரண்டுப் படங்கள் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன.

இவற்றுக்குப் பிறகு சூர்யா நேரடி ஹிந்திப் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். பாலிவுட்டை சேர்ந்த ராகேஷ் ஒம்பிரகாஷ் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘கர்ணா’ என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்தப் படத்தின் பட்ஜெட் 500 கோடியாம்.

பெரும் பட்ஜெட், பிரம்மாண்டமான செட்கள், மிரட்டும் அவுட்டோர் லொகேஷன்கள்

என இருப்பதால், இதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் அதிகமிருக்கிறதாம்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இருக்கும் இதுவரை பார்த்திராத இடங்களில் ஷூட் செய்ய ஒரு ரவுண்ட் அடித்திருக்கிறார்.

பெரும் பட்ஜெட் என்பதால், ’பாகுபலி’ வரிசைப் படங்களைப் போல், இரண்டு பாகங்களாக எடுக்கும் திட்டமாம்.

இது முழுக்க முழுக்க ஹிந்திப் படமாகவும், மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் – இந்திய படமாக வெளிவர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...