No menu items!

இந்தியாவிலேயே அதிக வரி கட்டும் நடிகை!

இந்தியாவிலேயே அதிக வரி கட்டும் நடிகை!

இந்திய சினிமாவில் இன்று நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்கும் சினிமாவாக இருப்பது ஹிந்தி சினிமா உலகமான பாலிவுட்தான். பாலிவுட்டில் முன்னணி வகிக்கும் நடிகைகள் நம்மூரில் இருக்கும் இரண்டாம்கட்ட ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் இப்போது பாலிவுட்டில் கொடி கட்டிப்பறந்து கொண்டிருக்கும் நடிகை திபீகா படுகோன். மேலும் இவர்தான் இந்தியாவிலேயே அதிக வரி கட்டும் நடிகை என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறார்.

2016-17-ம் நிதியாண்டில், திபீகா படுகோன் வருடத்திற்கு 10 கோடிக்கும் அதிகமாக வரி கட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்தளவிற்கு பாலிவுட் நடிகைகள் யாரும் வரி கட்டியதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி, திபீகா படுகோனின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடி இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவரது வருடாந்திர வருமானம் தோராயமாக 40 கோடி என்றும் கூறுகிறார்கள்.

2018-ல் திபீகா படுகோனுக்கு 37 வயது ஆன போது, போட்டிக்கு பல நடிகைகள் களமிறங்கிய போதும் கூட, தனது சம்பளத்தை படமொன்றுக்கு 15 கோடி முதல் 20 கோடி என ஏற்றினார். விளம்பரங்களில் நடிக்க 8 கோடி வாங்க ஆரம்பித்தாராம்.

திபீகா படுகோனுக்கு அடுத்து அதிக வரி கட்டும் நடிகையாக இரண்டாமிடத்தை ஆலியா பட் பிடித்திருக்கிறார். இவர் வருடத்திற்கு 5 கோடி முதல் 6 கோடி வரை வரி கட்டுவதாக கூறுகிறார்கள்.

2013-14-ம் நிதியாண்டில் அதிக வரி கட்டும் நடிகையாக முன்னிலையில் இருந்தவர் காத்ரின கைஃப். இவரை ஓரங்கட்டி விட்டு திபீகா படுகோன் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்களைப் பொறுத்தவரை அக்‌ஷய் குமார் வருடத்திற்கு 25 கோடி வரை வரி கட்டுகிறாராம்.


விஜய்க்கு அதிகரிக்கும் நெருக்கடி!

விஜய் தனது அரசியல் பிரவேசத்தை ஏறக்குறைய உறுதி செய்யும் கட்டத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.

அடுத்தவருடம் அநேகமாக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அவரது அரசியல் வாழ்க்கைப் பயணம் ஆரம்பமாகலாம் என்று கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவதை தனது மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அவர்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன என்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

அரசியல் பண்ண வேண்டுமென்றால் ஆள் பலமும், அதைவிட அதிக பணப்பலமும் வேண்டும். அது இரண்டும் விஜய்க்கு இருக்கிறது. ஆனாலும் சம்பாதித்த பணத்தை விஜய் இழக்க தயாராக இருப்பாரா என்று சினிமாவட்டாரத்தில் இன்று விஜய் பேசு பொருளாகி இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு நெருக்கடிகள் ஆரம்பமாகி இருக்கின்றன என்கிறார்கள். விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து அவற்றின் மேல் ஏதாவது நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதன் தொடர்ச்சியாக லியோ படம் வெளிவருவதிலும் சிக்கல்கள் எழக்கூடும் என விஜய் தரப்பு எதிர்பார்க்கிறதாம்.

இப்படி ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கையில் விஜய்க்கு பின்னால் காங்கிரஸ் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.


இலியானா காதலர் புகைப்படம்!

இலியானாவுக்கு இப்போது ஒன்பதாவது மாதம். ஆனால் இதுவரை இதற்கு காரணம் யார் என்று சொல்லாமலேயே சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களை மண்டை காய்யும் அளவிற்கு சஸ்பென்ஸில் வைத்திருந்தார்.

ஆனால் இதற்கு பலிகடா ஆனவர், பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டின் லாரெண்ட் மைக்கேல். இவருக்கும் இலியானாவுக்கும்தான் இப்போது காதல் என்று யூகங்களை இணையத்தில் கிளப்பிவிட்டனர்.

ஆனால் அது உண்மையில்லை என்பது மிக தாமதமாகவே சொன்னார் இலியானா. அதுவும் குழந்தைக்கு அப்பா இவர்தான் என்பதை ஒரேயொரு ப் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அவரது முகம் தெரியவில்லை. வெறும் தாடி மட்டும்தான் நன்றாக தெரிந்தது.
அப்படியே நெட்டிசன்களை குழப்பத்தில் விட்ட இலியானா இறுதியாக இப்போது தனது குழந்தைக்கு அப்பா இவர்தான் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

’டேட் நைட்’ என்ற அடைமொழியோடு இருக்கும் இந்த போட்டோவில் இலியானாவும், அவரது குழந்தைக்கு அப்பாவான அந்த தாடி நபரும் இருக்கிறார். இவ்வளவு சொன்ன இலியானா அவரது பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இதனால் இவர் யார்.. எந்த நாட்டைச் சேர்ந்தவர்.. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஆராய்ச்சியில் மீண்டும் தீவிரமாகி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...