No menu items!

எஸ்கேப்பான சூர்யா. சிக்கிய கார்த்தி!

எஸ்கேப்பான சூர்யா. சிக்கிய கார்த்தி!

விஜய் மகன் சஞ்சய் நடிக்கப் போகும் ரீமேக் என்று அடிப்படும் படம் ‘உப்பென்னா’. தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக அறிமுகமானப் படம்,

இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு. கிடைத்தது. இதனால் இந்தப்படத்தை இப்போது ரீமேக் செய்யலாமா என்று ஆலோசனைகள் நடந்து வருகிறது.

ஆனால் இப்போது விஷயம் அதைப் பற்றியது இல்லை. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. இவர் அறிமுகமான முதல் தெலுங்குப் படத்திலேயே எதிர்பார்பை கிளப்பியவர் இந்த கீர்த்தி ஷெட்டி.

அடுத்தடுத்து இவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிட் அடிக்கவில்லை. அதனால் தமிழ் பக்கமும் தலைக்காட்ட விரும்பிய கீர்த்தி லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கிய ‘வாரியர்’ படத்தில் நடித்தார். ஆனால் வாரியர் ரிலீஸூக்கு பின்பு ஒடிடி-யில் பெற்ற வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை. இதனால் கீர்த்தி ரொம்பவே அப்செட்.

அப்பொழுதான், பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சூர்யா ஹீரோ என்பதாலும், பாலா படம் என்பதாலும் ரொம்பவே உற்சாகமாக இருந்தார். ஆனால் அந்த மாதம் சந்தோஷம் 2 கூட தாங்கவில்லை. பாலாவுக்கும், சூர்யாவுக்கும் ஸ்பாட்டிலேயே கருத்துவேறுபாடு. இரண்டுப்பேரும் முட்டி மோத ‘வணங்கான்’ சுணங்கிப்போனான். சூர்யா இப்படத்தில் இல்லை என்று தெரிந்ததுமே. முதலில் எஸ்கேப் ஆனது கீர்த்தி ஷெட்டிதான்.

’வடை போச்சே’ என்று புலம்பிக்கொண்டிருந்த கீர்த்தி ஷெட்டிக்கு சினிமாவுக்கு அதிபதி சுக்ரனின் ஆதரவு இருக்கும் போல, க..க,,போ… ‘சூது கவ்வும்’ பட புகழ் நலன் குமாரசாமி இப்பொழுது கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியை யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, கீர்த்தியைதான் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் அண்ணன் சூர்யா எஸ்கேப் ஆனால் என்ன அவரது தம்பி கார்த்தியை இவருக்கு ஜோடியாக சிக்க வைத்து விட்டார்கள் என்கிறார்கள்.


விக்னேஷ் சிவன் – அஜித்திற்கு ஓகேதான். ஆனா…

முன்பெல்லாம் ரஜினி, கமல் படங்களை இயக்குவதென்பது பல இயக்குநர்களுக்கு ஒரு நீண்ட கால ஆசையாகவே இருக்கும்.

இன்று ரஜினி கமல் வரிசையில் விஜய் அஜித் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்க வேண்டுமென்பதே இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு பேராசையாக இருந்து வருகிறது.

அப்படியொரு வாய்ப்பு கிடைத்தும், அது நழுவிப் போனால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம் விக்னேஷ் சிவன்.

’பில்லா’, ‘ஆரம்பம்’ என இரு படங்களில் அஜித்துடன் நடித்ததன் மூலம் கிடைத்த நட்பு, லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் உடனிருக்கும் பரீட்ச்சயம் என இந்த இரண்டு விஷயங்களை வைத்து, தனது காதல் கணவருக்கு அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்கும் வாய்ப்பை நயன்தாரா வாங்கி கொடுத்தார்.

திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு, ‘என் வாழ்க்கை நல்லாதான் இருந்தது’ என்று புற்றுநோய் சம்பந்தமாக ஒரு விளம்பர படம் வருமே அதேபோல் விக்னேஷ் சிவனுக்கு எல்லாமும் நல்லாதான் இருந்தது ’துணிவு’ படம் வரும் வரை.

‘துணிவு’க்குப் பிறகு அஜித்தின் ஆக்‌ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி இல்லை என்று லைகா சுபாஸ்கரன் சொல்ல, நிலைமை தலைக்கீழானது.

விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்குப் பிடிக்கவில்லை. அதனால் அஜித்62-ஐ வேறு ஒரு இயக்குநர்தான் இயக்கப் போகிறார் என்று செய்தி கசிய ஆரம்பித்தது.

அதேபோல்தான் நடந்தது. அஜித் 62-ஐ மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டாலும், அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. காரணம் கதையை டிங்கரிங் செய்யும் வேலைகள் ஒருபக்கம். உடல்நலமில்லாமல் அஜித்தின் அப்பாவின் மறைவு ஒரு பக்கம்.

அஜித் அப்பாவுக்கான 16-ம் நாள் விழாவுக்குப் பிறகு பின்னாளில் பட அறிவிப்பை வெளியிடலாம் என தள்ளி வைத்துவிட்டது லைகா.

ஆனால் அஜித்62 எப்படி கைநழுவிப் போனது என்பது பற்றி இப்பொழுதான் விக்னேஷ் சிவன் மனம் திறந்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் லைகா சுபாஸ்கரனுக்கு முதலில் சொன்ன கதையை அவர் ஓகே செய்ததாகவும், பிறகு படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய மாற்றங்களை செய்ய சொன்னதாகவும்,.. ஆனால் கதையில் அந்த மாற்றங்களை செய்ய விக்னேஷ் சிவன் விருப்பப்படவில்லை என்று ஏகே62 நழுவிய காரணத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.

இந்தப் படம் கை நழுவிப் போனதில் விக்னேஷ் சிவனுக்கு வருத்தம் என்றாலும், எதிர்காலத்தில் தன்னுடைய கதையில் அஜித்தை வைத்து படம் இயக்குவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.


’ஒகே லாலேட்டா., இக்கட ச்சூடு’ – சிரஞ்சீவியின் புது கார்

சில நாட்களுக்கு முன்புதான் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் புத்தம் புது கார் ஒன்றை வாங்கியிருந்தார். மோகன் லாலின் கேரஜூக்கு புதிதாக வந்திருக்கும் இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி காரின் மதிப்பு சுமார் 5 கோடி.

’ஒகே லாலேட்டா., இக்கட ச்சூடு’ என்று தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும் தனது கார் கலெக்‌ஷனில் மேலும் ஒரு புது காரை வாங்கி இருக்கிறார்.

டொயோட்டாவின் ஹை-எண்ட் கருப்பு நிற வெல்ஃபயர் மினி வேனை வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 1.90 கோடி என்கிறார்கள்.

சிரஞ்சீவிக்கும் சொகுசு கார்களை வாங்குவது பிடிக்கும். இந்த புதிய வெல்ஃபயர், ஏற்கனவே அவரது கேராஜ்ஜில் இருக்கும் Rolls Royce Phantom, Toyota Land Cruiser, Mercedes-Benz G63 AMG, Land Rover Range Rover Autobiography மற்றும் Range Rover Vogue கார்களுடன் வரிசைக்கட்டி நிற்கிறது.

முக்கியமான விஷயம் என்னவென்றால், சினிமாகாரர்களுக்கு பொதுவாகவே ஏதாவது ப்ராண்ட்டின் புதிய கார் மீது திடீரென மோகம் வரும். உடனே ஆளாளுக்கு உடனே அந்த காரை வாங்குவார்கள். இப்போது சிரஞ்சீவி வாங்கிய காரைதான் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது கூடுதல் செளகரியமுள்ள இன்னோவாவின் அண்ணன் அவ்வளவுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...