No menu items!

பட்டாசு  – பாஜகவுக்கு எதிராக  ரகுல் ப்ரீத் சிங்

பட்டாசு  – பாஜகவுக்கு எதிராக  ரகுல் ப்ரீத் சிங்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா  வெடிக்கக் கூடாதா என்று ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை அடித்த கமெண்ட்டினால் உண்டான பிரச்சினை பரபரவென பற்றிக்கொண்டது ஞாபகம் இருக்கலாம்.

தீபாவளிக்காக ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் பட்டாசு வாங்கி வெடிப்பதால், ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்கள் பிழைக்கும்’ என்று  சொல்லியிருந்தார்.

இதற்கு எதிர்வினை கொடுப்பது போல அமைந்திருக்கிறது யதேச்சையாக

ரகுல் ப்ரீத் சிங்கின் சொன்ன லேட்டஸ்ட் கமெண்ட்.

’என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தீபாவளி அது. என்னோட அப்பா எனக்கு 500 ரூபாயு கொடுத்தார். அதை வாங்கிய என்னிடம்,, ‘அந்த 500 ரூபாயை தீயில் எரிக்க சொன்னார் எனக்கு ஒண்ணும் தெரியல. ஷாக்காக இருந்துச்சு. அப்புறம் ஏன்பா பணத்தை எரிக்க சொல்றீங்கன்னு கேட்டேன். இந்த பணத்தை எரிக்கிறதைதான் நீ பட்டாசு வாங்கி போடுறப்பவும் செய்யுற. காசு கொடுத்து பட்டாசு வாங்கி கொளுத்துற. அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. இந்த பணத்துல கஷ்டப்படுறவங்களுக்கு உதவ பயன்படுத்து. வசதியில்லாவங்களுக்கு தீபாவளி கொண்டாட கொடுன்னு சொன்னார்.

அப்புறம் அப்பா கூட போய் ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வந்து எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தவங்களுக்கு கொடுத்தேன். அவங்க முகத்துல அவ்வளவு சந்தோஷம். அன்னிக்கு ஒரு வித்தியாசமான தீபாவளியை உணர்ந்தேன். அன்றிலிருந்து நான் பட்டாசு போடுறதே இல்ல’ என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.


விஜயின்  ’வாரிசு’ மகேஷ் பாபு பட காப்பியா?

விஜயின் ‘வாரிசு’ பற்றி நாளுக்கு நாள்  புதுப்புது செய்திகள் கிளம்பியவாறு இருக்கிறது.  இப்படி அடிக்கடி கிளம்பும் செய்திகள், கிசுகிசுக்களால் விஜய் ரொம்பவே அப்செட் என்கிறார்கள்.

முதல் முறையாக தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து நேரடியாக களத்தில் இறங்கும் படம் என்பதால் விஜய் கொஞ்சம் பதட்டத்தோடுதான் இருக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

தமிழில் இருக்கும் மாஸ் தெலுங்கில் இல்லாவிட்டாலும், சொல்லிக்கொள்கிற மாதிரி ஒரு வெற்றியாக ‘வாரிசு’ இருக்கவேண்டுமென விஜய் நினைக்கிறாராம்.

ஒரு பக்கம் விஜய் இப்படி யோசித்து கொண்டிருக்க, ’வாரிசு’ படம் பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு புது கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

’வாரிசு’ படத்தின் கதை மகேஷ் பாபு நடித்த ;மகர்ஷி; படக்கதையின் தழுவல்தான். மகர்ஷி கதையை கொஞ்சம் டிங்கரிங் வேலைகள் செய்து புத்தம் புதிதாக ‘வாரிசாக’ களமிறக்கி இருக்கிறார்கள் என்று பேச்சு அடிப்படுகிறது.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்று தெரியுமா…. ’மகர்ஷி’ படத்தின் இயக்குநர் பெயர் வம்சி படிப்பள்ளி.


கமர்ஷியல் ஹீரோக்கள் ரேஸில் முந்தும் கார்த்தி

இன்றைய நிலவரப்படி, தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியாக இருக்கும் ஹீரோ யாரென்று பட்டியலிட்டால்  அஜித், விஜய், சூர்யா. விக்ரம், கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ் என எல்லோரையும் ஒரங்கட்டி விட்டு  சக்ஸஸ்சின் ஹைவேயில் டாப் கியரில் போய் கொண்டிருப்பவர் கார்த்தி.

விஷயம் இதுதான். அடுத்த இரண்டு வருடங்களுக்கு எதிர்பார்ப்பை கிளப்பும் படங்களை தன் வசம் வைத்திருக்கிறார்.

’பொன்னியின் செல்வன்’ வெற்றி  அதன் இரண்டாம் பாகத்தின் மீது இப்பொழுதே எதிர்பார்பை கிளப்பியிருக்கிறது.

அடுத்து ’கைதி’ படத்தின் வெற்றியை அறுவடை செய்ய லோகேஷ் கனகராஜ் போட்டு கொடுத்த ஸ்கெட்ச் ’கைதி-2’. விஜயின் 67 -வது படத்தை முடித்துவிட்டு ’கைதி-2’ கையிலெடுக்க இருக்கிறார்கள். வணிகரீதியாகவும் இப்படத்திற்கு வரவேற்பு இருக்கும்.

தற்போது வெளியாகி இருக்கும் ‘சர்தார்’ படமும் வணிகரீதியாக தயாரிப்பாளரின் கல்லாவை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ‘சர்தார்-2’ க்கும் ப்ளானை தொடங்கிவிட்டார்கள்.

அடுத்தடுத்து சீக்வல் படங்களில் நடிக்கும் ஒரே  கமர்ஷியல் ஹீரோ என்ற ஒரு தனி அடையாளத்தையும் கைப்பற்றியிருக்கிறார் கார்த்தி.

நடிகர்களிடையே கொஞ்சம் அலட்டாத, பந்தா காட்டாத நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இப்பொழுது உண்டாகி இருக்கும் இந்த கமர்ஷியல் இடம் இவரை மாற்றாமல் இருந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...