No menu items!

கமல் படத்தினால் மிகப்பெரிய நஷ்டம் – லிங்குசாமி ஷாக் ஸ்டேட்மெண்ட்!

கமல் படத்தினால் மிகப்பெரிய நஷ்டம் – லிங்குசாமி ஷாக் ஸ்டேட்மெண்ட்!

கமல் நடித்து வெளியான ‘உத்தம வில்லன்’ படத்தால் தனக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மம்முட்டி நடித்த ‘ஆனந்தம்’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதைத்தொடர்ந்து சண்டகோழி, பையா, ரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். பின்னர் திருப்பதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சில படங்களை தயாரித்தார்.

கடந்த 200-ம் ஆண்டில் கமல் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தை லிங்குசாமி தயாரித்தார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து லிங்குசாமி படங்களை தயாரிப்பதை நிறுத்தினார். உத்தம வில்லன் படம் தோல்வியடைந்ததால் அதற்கு பதில் லிங்குசாமி தயாரிக்கும் வேறொரு படத்தில் நடித்துக் கொடுக்க கமல் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் லிங்குசாமி இன்று அளித்துள்ள விளக்கம்.

தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினி முருகன் போன்ற தரமாக மிகப்பெரிய வெற்றிப் படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தையும் தயாரித்து வெளியிட்டது.

முதல் பிரதி அடிப்படையில் நாங்கள் தயாரித்த படமான ‘உத்தம வில்லன்’ எங்க நிறுவனத்துக்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இது கமல்ஹாசனுக்கு நன்றாகவே தெரியும். ‘உத்தம வில்லன்’ படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமல்ஹாசனும், அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து, தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

அதற்கான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் பிரபல யூடிப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ‘உத்தம வில்லன்’ படத்தைப் பற்றி யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்த லிங்குசாமி, “முதலில் நாங்கள் த்ரிஷ்யம் படத்தைத்தான் கமலை வைத்து தமிழில் எடுக்க நினைத்தோம். ஆனால் அதற்கு அப்போது கமல் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு அதே படத்தை வேறொரு நிறுவனத்துக்கு நடித்துக் கொடுத்தார்.

உத்தம வில்லன் படத்தின் சில காட்சிகளை எடிட் செய்ய வேண்டும் என்று கமலிடம் நான் கூறியிருந்தேன். இது தொடர்பாக ஒரு லிஸ்ட்டையே அவருக்கு கொடுத்தேன். அதன்படி எடிட் செய்திருந்தால் படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஆனால் அதை கமல் ஏற்கவில்லை” என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...