2017-ல் தமிழ் சினிமாவில் இயக்குநராக எண்ட்ரீ.
அடுத்த ஐந்து வருடங்களில் ‘மாநகரம்’, ‘கைதி, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என 4 திரைப்படங்கள். 4 படங்களும் ஹிட்.
இப்படி லோகேஷ் கனகராஜின் சினிமா கேரியர் டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.
இன்றிலிருந்து அடுத்த 10 வருடம் லோகேஷ் என்ன செய்யப் போகிறார் என்பதை இப்பொழுதே தீர்மானித்துவிட்டதாக அவரது டீம் கூறுகிறது.
இப்பொழுது விஜய்67 படத்தின் கதையில் அவசியமான டச்-அப் வேலைகள் முழுவீச்சில் போய்கொண்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜின் டீம் மும்முரமாக டிஸ்கஷனில் இறங்கியிருக்கிறது.
இப்படத்திற்கு பிறகு ‘கைதி 2’ வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது. இதில் கார்த்தி கதாபாத்திரம் ஜெயிலுக்கு போவதற்கு முன்பு எப்படி இருந்தது. பின்னணி என்ன என்பது போல ‘கைதி 2’ படம் இருக்குமாம்.
அடுத்து ‘விக்ரம் 3’. இதற்கான ஐடியா மட்டுமே தற்போது ஒகேவாகி இருக்கிறது. மற்றபடி கதையோ, திரைக்கதையோ இன்னும் முடிவாகவில்லை.
இதற்கு பிறகு சூர்யாவை வைத்து ‘ரோலக்ஸ்’ என்ற பெயரில் ரோலக்ஸின் ஃப்ளாஷ்பேக்கை ஒரு படமாக எடுக்கும் திட்டம் பேசப்பட்டு வருகிறதாம்.
லோகேஷ் கனகராஜ் இந்தப் படங்களை எடுத்து முடிப்பதற்கே 10 வருடங்கள் ஆகிவிடும். இதனால் தன்னைத் தேடி வந்த தெலுங்கு மற்றும் ஹிந்திப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ் சினிமாவே முதல் இலக்கு என்று லோகேஷ் தீர்மானமாக இருக்கிறாராம்.
கொசுறு செய்தி. லோகேஷ் கனகராஜ் கையிலெடுக்கும் இந்தப் படங்கள் அனைத்துமே மாஃபியா கதைகள்தான்.
சமந்தா ஹெல்த் அப்டேட்
சமந்தாவுக்கு மிகவும் அரிதான ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மயோசிடிஸ் இருக்கிறது என்றதும் பரபரப்பானது தென்னிந்திய சினிமா.
முதலில் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். ஆனால் அது பெரிதாக அவருக்கு உதவவில்லை. இதனால் சோர்ந்து போன சமந்தா, தென் கொரியாவுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்கள்.
ஆனால் சமந்தா தென் கொரியாவுக்குச் செல்லவில்லை. இங்கே ஹைதராபாத்தில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்பொழுது ஆயுர்வேதா மற்றும் மாற்றுச் சிகிச்சை முறையில் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
சீக்கிரமே குணமடைந்து ஷூட்டிங் திரும்புவார் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
சமந்தா குணமடைவது என்பது எதிர்பார்த்ததைவிட இன்னும் சில காலம் பிடிக்கும் என்கிறது சமந்தாவுக்கு நெருங்கிய வட்டாரம். இதனால் ஷூட்டிங் செல்லாமல் சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் அப்படி நிற்கின்றன.
சமந்தாவை புதியப்படத்தில் ஒப்பந்தம் செய்ய சென்ற தமிழ் தயாரிப்பாளரிடம் இப்பொழுது கால்ஷீட் கொடுக்கமுடியாது என்று சமந்தாவின் மேனேஜர் சொல்லியிருப்பதாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது.
விஷாலுக்கும் அபிநயாவுக்கும் காதலா?
விஷாலுக்கும், அனுஷா அல்லா என்ற பெண்ணுக்கும் நிச்சயத்தார்த்தம் நடந்தது. பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த நிச்சயத்தார்த்தை கேன்சல் செய்துவிட்டார்கள்.
அதன் பிறகு ’லத்தி’ படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் விஷால். ஆனால் இந்தப்படம் முடிவடைய நீண்டகாலம் பிடித்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீடியா பக்கம் அதிகம் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார் விஷால்.
விஷாலுக்கு இப்போது 45 வயதாகிறது. அவருடன் நட்பில் இருந்த ஆர்யா கூட திருமணமாகி அப்பாவாகவும் ஆகிவிட்டார். இதனால் விஷாலின் திருமணம் குறித்து அவரது பெற்றோர்கள் கவலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் விஷாலும், அபிநயாவும் ஒன்றாக தென்படுவதாக ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து கொள்கின்றன. இவரும் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கிசுகிசு அடிப்படுகிறது.
அபிநயா பற்றி கேள்வி கேட்டால் எந்த யோசனையும் இல்லாமல் சட்டென்று மறுத்துவிடுகிறார் விஷால். இன்னும் சில நாட்களில் உண்மை எப்படியாவது வெளி வந்துவிடும் என்கிறார்கள்.
யார் இந்த அபிநயா என்று கேட்பவர்களுக்காக, ‘நாடோடிகள்’ படத்தில் நடித்திருப்பாரே அதே அபிநயாதான். இவருக்கு காது கேட்காது. அதனால் வாய் பேசவும் முடியாது. ஆனாலும் தனது திறமையால் மிக அழகாக வாயசைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும்படி நடிப்பதில் அபிநயா கில்லாடி.