No menu items!

பி. வாசு, கீரவாணியைக் கடுப்படித்த லாரன்ஸ்!

பி. வாசு, கீரவாணியைக் கடுப்படித்த லாரன்ஸ்!

ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா நடிக்க, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த ‘சந்திரமுகி’ மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. வசூலிலும் பெரும் சாதனையைப் படைத்தது.

இந்த சென்டிமெண்ட்டை வைத்து இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று கணக்குப் போட்ட பி.வாசு., ’சந்திரமுகி -2’-வை ப்ரிக்வல் ஆக எடுக்க திட்டமிட்டார். ரஜினி இல்லையென்றதும், ரஜினியின் விசிறி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸை வைத்து களத்தில் இறங்கினார்.

ஒரு வழியாக படம் வெளியாகிவிட்டது. ஆனால் பி.வாசு நினைத்த வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படம் எடுப்பதற்கு பதிலாக, இரண்டாம் பாகத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என்று கமெண்ட்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஏன் இந்த சொதப்பல் என்று விசாரித்தால், ராகவா லாரன்ஸின் தலையீடுதான் காரணமாம்.

ஆரம்பத்தில் அவரது காஞ்சனா பட  அப்பாவி ஹீரோ மாதிரி கமிட் ஆனவர், படம் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு காஞ்சனா புகுந்த வில்லன் மாதிரி மாறிவிட்டாராம். எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்திருக்கிறாராம். கதையில் மாற்றம் சொன்னாராம்.

ஒரு வழியாக படமெடுத்து முடித்தப் பிறகு, எடிட்டிங்கிலும் லாரன்ஸ் தலையிட்டு இருக்கிறாராம். பி.வாசுவை கொஞ்சம் ஓய்வெடுக்க வைத்துவிட்டு, 20 நிமிட காட்சிகளை வெட்டித் தூக்கியெறிந்து விட்டாராம்.

அடுத்து இசை பக்கம் வந்தவர், ஆஸ்கர் விருது வாங்கிய கீரவாணியின்  இசைக்குழுவினரை ஒரங்கட்டிவிட்டு தனது சார்பாக 10 கீபோர்ட் ப்ளேயர்களையும் வைத்து விட்டாராம்.

இப்படி எல்லாவற்றிலும் லாரன்ஸ் தனது வேலையைக் காட்டி, உண்மையான வேட்டையன் ராஜாவாக மாறிவிட்டார் என்கிறார்கள்.


’லியோ’ வியாபாரம் எத்தனை கோடி?

விஜய்யின் ‘லியோ’ ட்ரெய்லர் வெளியாகி, பல கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இது எதிர்மறையான கமெண்ட்களாக இருந்தாலும், லியோ பட த்திற்கான விளம்பரமாகவும் மாறும் என எதிர்பார்க்கிறார்கள்.

படம் வெளியாகும் வரை ட்ரெய்லரில் இடம்பெற்ற கடுமையான வார்த்தைகள் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்த ட்ரெய்லர் கொடுத்த விளம்பரம் படத்தின் வியாபாரத்திற்கு நன்றாகவே வேலை செய்யும் என்கிறார்கள் கோலிவுட் வியாபாரப் புள்ளிகள். இதெல்லாம் அக்டோபர் 19-ம் தேதிக்கு பிறகுதான், என்றாலும் ரிலீஸூக்கு முன்னாடியே லியோ வியாபாரம் சூடுப்பிடித்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாடுகளில் முன்பதிவுகளின் எண்ணிக்கை இதுவரையில்லாத அளவு கணிசமாக அதிகரித்து வருகிறது.

ரிலீஸூக்கு முன்பாகவே 200 கோடி வரை வியாபாரம் நடந்திருக்கிறதாம். அதன் விவரம்

திரையரங்கு உரிமை

தமிழ்நாடு   – சுமார் 100 கோடி

கேரளா  – சுமார் 16 கோடி

கர்நாடகா – சுமார் 15 கோடி

தெலுங்கு – சுமார் 22 கோடி

இதர இந்திய மொழிகள் – சுமார் 10 கோடி

வெளிநாடு – சுமார் 65 கோடி

மொத்த திரையரங்கு உரிமை வியாபாரம் – சுமார் 228 கோடி

இதனால் ’லியோ’ படத்தயாரிப்பாளர் லலித் உற்சாகத்தில் இருக்கிறாராம்.


தாய்லாந்தில் சூர்யா!!

சூர்யா தற்போது நடித்து வரும் ‘கங்குவா’  படம் அடுத்தவருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இதனால் இப்படத்தின் ஷூட்டிங்கை மளமளவென முடிக்கும் வேலைகள் நடக்கிறது.

இப்படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் அதிகமிருப்பதால், சீக்கிரமே முடித்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறதாம்.

இதற்காகவே தாய்லாந்திற்குப் பறந்திருக்கிறார் சூர்யா. இங்கு ’கங்குவா’ படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தாய்லாந்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் 3 வாரம் ஷூட் செய்கிறார்கள். அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரம் வரை ஷூட்டிங் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பியதும், சில அவசியமான பேட்ச் வொர்க் நடைப்பெறும். இது முடிந்துவிட்டால் நவம்பர் மாதம் இறுதியில் ‘கங்குவா’ ஷூட்டிங் முடிவடைந்து, பூசணிக்காய் உடைக்கப்படும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...