No menu items!

ஏ.ஆர்.ரஹ்மானை முந்திய அனிருத்!

ஏ.ஆர்.ரஹ்மானை முந்திய அனிருத்!

Spotify App இந்த வருடத்தின் நேயர் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் அந்த வருடம் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட பாடல், இசை தொகுப்பு, தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல்கள் பட்டியலை ஸ்பாட்டிஃபை வெளியிடுகிறது.

எங்கும் எப்போதும் தங்கு தடையற்ற இசை என்பதுதான் ஸ்பாட்டிஃபையின் அடிப்படை.

இசைத் தட்டுக்கள் இடத்தை காசெட்டுக்கள் தட்டிப் பறித்தது போல் காசெட்டுகளின் இடத்தை சிடிக்கள் பிடித்ததுபோல் சிடிக்கள் இடத்தை பென் ட்ரைவ்கள் எடுத்துக் கொண்டது போல்..இன்று ட்ரைவ்களின் இடத்தை ஸ்பாட்டிஃபை பிடித்திருக்கிறது.

உலகின் அத்தனை இசைக் கலைஞர்களின் இசையையும் பாடல்களையும் ஸ்பாட்டிஃபையில் கேட்க முடியும்.

சர்வதேச அளவில் இசை செயலிகளில் ஸ்பாட்டிஃபை முன்னணியில் இருக்கிறது.

இந்தியாவிலும் Spotify App முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த ஸ்பாட்டிஃபையில் ஒரு வசதி. ஒரு பாடலையோ ஒரு இசைத் தொகுப்பையோ எத்தனை பேர் கேட்டார்கள், எத்தனை முறை கேட்டார்கள், எவ்வளவு நேரம் கேட்டார்கள், உலகின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டார்கள் என்பதை துல்லியமாக அறிந்துக் கொள்ள முடியும்.

இந்த வசதியினால் எந்த இசையமைப்பாளரின் இசையை இப்போது மக்கள் அதிகம் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

இந்தியாவின் நம்பர் ஒன் இசைக் கலைஞராக இந்த வருடமும் அரிஜித் சிங்தான் இருக்கிறார். இவர் பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளரும் கூட. தொடர்ந்து நான்காவது ஆண்டாக நம்பர் ஒன் நிலையில் இருக்கிறார். இந்தியிலும் பெங்காலியிலும் அதிகம் பாடியிருக்கும் அரிஜித் தமிழிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 24 படத்தில் அரிஜித் சிங் பாடிய ‘நான் உன் அருகினிலே’ பாடல் பெரிய ஹிட். இளசுகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து வயதினருக்கும் இவரது பாடல்கள் பிடித்திருப்பது இவருடைய சிறப்பு.

ஸ்பாட்டிஃபை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ப்ரிதம். பாடகர், இசையமைப்பாளர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவரது இசை மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது.

மூன்றாவது இடத்துக்கு முந்தியிருக்கிறார் அனிருத். கடந்த முறை இவர் நான்காவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டில் இவரது பாடல்கள் 280 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. 185 நாடுகளிலிருந்து 6.8 கோடி பேர் இவரது பாடல்களைக் கேட்டிருக்கிறார்கள். 14 கோடி மணி நேரம் இவரது பாடல்கள் கேட்கப்பட்டிருக்கிறது.

நான்காவது இடத்துக்கு இறங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஐந்தாவது இடத்தில் நமக்கெல்லாம் தெரிந்த ஷ்ரேயா கோஷல். மயக்கும் குரலில் நம்மையெல்லாம் வசீகரிப்பவர். இவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்தான். தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

ஸ்பாட்டிஃபை டாப் 5 பட்டியலில் மூவர் மேற்கு வங்கத்தை சார்ந்தவர்களாகவும் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஸ்பாட்டிஃபை தளத்தில் முதலிடத்தில் பாலிவுட் திரைப்பட பாடல்களும் அடுத்த இடத்தில் இந்தி பாப் பாடல்களும் மூன்றாவது இடத்தில் தமிழ்ப் பாடல்களும் இடம் பிடித்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...