No menu items!

எமி ஜாக்ஸனின் நான்காவது காதல்!

எமி ஜாக்ஸனின் நான்காவது காதல்!

காதல் மன்னன், காதல் இளவரசன் போன்ற பட்டங்களை நாயகர்களுக்கு கொடுத்து அழகுபார்ப்பது நம் வழக்கம். இதே பட்டத்தை நாயகிகளுக்கு கொடுப்பதாக இருந்தால், எந்த யோசனையும் செய்யாமல் அதை எமி ஜாக்சனுக்கு கொடுத்துவிடலாம். நான்காவது முறையாக அவர் காதலரை மாற்றியுள்ளதே இதற்கு காரணம்.

கோலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் எமி.ஜாக்ஸன். இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான இவர், ‘மதராஸபட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விஜய்யுடன் ’தெறி’ விக்ரமுடன் ’ஐ’ மற்றும் ’தாண்டவம்’ தனுஷுடன் ’தங்கமகன்’ என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார்.

2017-ம் ஆண்டு ஹாலிவுட்டில் பிரபலமான ’வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற பிரபலமான காமிக்ஸ் கதாப்பாத்திரத்தில் தொலைக்காட்சியிலும் நடித்தார். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

ஒருபக்கம் சினிமாவில் பிஸியாக இருந்த இவர், மறுபக்கம் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இந்தி நடிகருமான பிரதீக் பப்பரை சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து பிரிந்தார். அதன் பின் ஐரோப்பிய நாடுகளில் பிரபல குத்துச்சண்டை வீரரான செல் கிர்க்கை காதலித்தார். ஆனால், சில மாதங்களில் இந்தக் காதலும் கசந்தது.

பிறகு லண்டனில் ஹோட்டல் தொழிலில் பிரபலமாக இருக்கும் ஜார்ஜ் என்பவரை காதலித்தார். பரஸ்பரம் மோதிரம் மாற்றிக்கொள்ளும் வரை இந்த காதல் சென்றது. அதோடு நிற்காமல் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் குழந்தையுடன் தான் செய்யும் சேட்டைகளையும் அவ்வப்போது பதிவு செய்து வந்தார் எமி.

ஆனால், சில நாட்களிலேயே ஜார்ஜுடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் அந்த திருமணமும் தடைபட்டது.

இந்நிலையில் இப்போது பிரபல ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்குடன் எமிக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காதலாவது நிலைத்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...