சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா தனது மார்பழகைக் காட்டியபடி ஒரு லிஃப்ட்டுக்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.
கதவைத் திறந்து கொண்டு, லிஃப்ட்டுக்குள் நுழையும் ராஷ்மிகா மந்தனா சிரிப்பது போன்ற அந்த வீடியோ ஒரு சில விநாடிகள்தான் ஓடுகிறது. ஆனால் அதில் ராஷ்மிகா அழகை வெளிப்படையாக காட்டுவதுபோல் இருந்தது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்ட்களை கன்னாபின்னாவென போட்டுவிட, ராஷ்மிகா மந்தானாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கோபம் பொசுக்கென்று பொத்து கொண்டு வந்திருக்கிறது.
அந்த வீடியோவை பார்த்த அமிதாப், ’இப்படி ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மார்ஃப் செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. இப்படி ஒருத்தருடைய முகத்தை தவறாகப் பயன்படுத்த கூடாது. இந்த மாதிரி மார்ஃபிங் செய்ததற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ என்று பொங்கியெழுந்திருக்கிறார்.
சமீபத்தில் ‘குட்பை’ என்ற படத்தில் அமிதாப்புடன் ராஷ்மிகா இணைந்து நடித்திருந்தார்.
இந்த ஏடாக்கூடமான வீடியோ குறித்து ராஷ்மிகா மந்தனா எந்தவிதமான கமெண்ட்டையும் சொல்லவில்லை. தனது கோபத்தை வெளிக்காட்டவும் இல்லை.
ஆனால் இப்படி மார்ஃபிங் செய்து வீடியோவை வெளியிடுவது ஒரு நடிகை என்று எல்லோரும் ரசித்தாலும், இதே பிரச்சினை ஒரு சாதாரண பெண்ணுக்கும் நேரலாம். அது தீவிரமான பிரச்சினையாக உருவாகலாம் என்பதால் இதுபோன்ற மார்ஃபிங் வீடியோக்களை தடுக்க அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காஸ்ட்லி வில்லனான எஸ்.ஜே.சூர்யா!
கொஞ்ச காலமாகவே தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு கடும் பஞ்சம்.
நீண்ட காலமாக இங்கே வில்லனாக வலம் வந்த பிரகாஷ் ராஜுக்கு இப்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லை. ஏறக்குறைய குணசித்திர நடிகராகிவிட்டார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ் ராஜூக்கு பின்பு சொல்லிக்கொள்கிற மாதிரி வில்லன்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.
இப்படியொரு சூழலில்தான் பாலிவுட்டில் இருந்து வில்லன்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தனர் தமிழ் திரைப்பட இயக்குநர்கள்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நவாசுதீன் சித்திக், ’லியோ’வில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் இப்படி வில்லன்கள் இறக்குமதி தொடர்ந்தது.
ஆனால் ’மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ என இரண்டே இரண்டுப் படங்கள்தான். இயக்குநராக இருந்து நடிகராக களமிறங்கிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு சுக்ரதிசை ஆரம்பித்துவிட்டது என்கிறது கோலிவுட்.
இன்று தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு சினிமாவிலும் அதிகம் கமிட் ஆகிற வில்லன் ஆகியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த சஞ்சய் தத், பரபரப்பான வில்லனாக களமிறங்கினாலும் இவருக்கு சம்பளம் 6 கோடிதான். அவரும் தமிழ், தெலுங்குப் படங்களில் இதே சம்பளத்துடன் நடித்து வருகிறார்.
ஆனால் இப்போது எஸ்.ஜே. சூர்யா, ஒரு படத்தில் வில்லனாக நடிக்க 10 கோடி சம்பளம் கேட்கிறாராம். இந்த 10 கோடி விஷயத்தில் ஆடித் தள்ளுபடி மாதிரியான எந்த சலுகையையும் அவர் கொடுப்பது இல்லை. ஹீரோ அல்லது டைரக்ரடருக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தில் குறைத்து வாய்ப்புகளை அள்ளும் சூழலிலும் இவர் இப்போது இல்லை என்கிறார்கள்.
10 கோடி கொடுத்தால் கால்ஷீட். இல்லையென்றால் தாராளமாக வேறு நட்சத்திரத்தைப் பார்த்து கொள்ளுங்கள் என்று அமைதியாக கூறிவிடுகிறாராம்.
ஆனாலும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இப்போது இருக்கும் மவுசினால், 10 கோடி கொடுத்து தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்யும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
இதனால் இன்றைய நிலவரப்படி, தென்னிந்திய சினிமாவின் காஸ்ட்லியான வில்லனாகி இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனா?
’லியோ’ வசூல் சர்ச்சைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ரஜினியுடன் அடுத்துஇணையவிருக்கும் பட வேலைகளில் இறங்கி விட்டார் லோகேஷ் கனகராஜ். இப்பட த்திற்கு தற்காலிகமாக ’தலைவர் 171’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் உலாவந்து கொண்டிருக்கிறது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை லோகேஷின் கதையில், அவரது நண்பர் ரத்னகுமார் இயக்குகிறார். இதில் நடிக்க லாரன்ஸூடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதை வைத்தே லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவிருக்கும் படத்திலும் லாரன்ஸ் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று ஒரு யூகம் கிளம்பியது.