No menu items!

அசர வைக்கும் ஆலியா பட் சொத்து மதிப்பு!

அசர வைக்கும் ஆலியா பட் சொத்து மதிப்பு!

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ஆலியா பட். ஒரு படத்தில் நடிக்க இவர் வாங்கும் சம்பளம் வெறும் 20 கோடி மட்டும்தான் என்பதால் பலருடைய பொறாமைக்கும் உள்ளாகி இருக்கிறார். சில விநாடிகளே ஓடுகிற விளம்பரப் படங்களில் நடிக்க இவர் ஒன்று முதல் 2 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்று அடுத்து ஒரு அதிர்ச்சியையும் கொடுக்கிறார்கள்.

இப்படி அடுத்தடுத்து அதிரவைக்கும் இவரது சம்பளம் உச்சத்தில் இருப்பதற்கு காரணம், ஆலியா பட் இதுவரையில் 20 அதிக வசூல் செய்த படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படங்களின் பட்டியலில் ‘பிரம்மாஸ்திரா – முதல் பாகம் ஷிவா’, ஆர்.ஆர்.ஆர்., கங்குபாய் கத்தியாவாடி, கல்லி பாய், ராஸி என பல ஹிட் படங்கள் அடங்கும்.

அடுத்து இவர் நடித்த 7 படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டியிருக்கின்றன. இதனால் இவருக்கு இருக்கும் மவுசு இப்போது உச்சத்தில் இருக்கிறது.

பாலிவுட்டில் கொடிக்கட்டிப் பறக்கும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு பற்றி சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மும்பையில் இவருக்கு இருக்கும் பந்த்ரா அபார்ட்மெண்ட்டின் மதிப்பு சுமார் 15 கோடி. ரன்பீர் கபூரை இவர் திருமணம் செய்வதற்கு முன்பு வாங்கிய வாஸ்து அப்பார்ட்மெண்ட்டின் விலை சுமார் 32 கோடி.

நடித்தோம், சம்பாதித்தோம், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பண்ணை வீடு, தோப்பு வாங்கினோம் என்று செட்டிலாக விரும்பாத ஆலியா பட், சினிமா தவிர்த்து பல துறைகளில் முதலீடும் செய்து வருகிறார்.

Ed-Mama என்பது இவர் உருவாக்கிய ஒரு ப்ராண்ட். குழந்தைகளுக்கான பிரத்தியேகமான தயாரிப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகி இருக்கிறது.

மேலும் நிதிநிலை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரபல நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிவிக்கையில், ஆலியா பட் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் சுமார் 40 கோடி என்றும் ரியல் எஸ்டேட்டில் இவரது முதலீடு சுமார் 60 கோடி என்று தெரிவித்து இருக்கிறது . இந்த முதலீடுகள் மற்றும் சொந்த நிறுவனம் என எல்லாவற்றையும் சேர்த்தால் சுமார் 520 கோடி சொத்து ஆலியா பட்டுக்கு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆலியாவை எப்படியாவது தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்துவிட வேண்டுமென்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை. காரணம் சம்பளம் பிரச்சினைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...