No menu items!

ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது வயது 50

ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது வயது 50

1994. தென்னாப்பிரிக்காவிலிருக்கும் சன் சிட்டி.

பல நாடுகளைச் சேர்ந்த 87 அழகிகளும் ஒரு மிகப்பிரம்மாண்டமான அரங்கத்தில் பதைபதைப்போடு காத்திருந்தார்கள்.

காரணம் அந்த விழா 44-வது உலக அழகியைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய நிகழ்வாக இருந்தது.

ஜமைக்காவைச் சேர்ந்த லிஸா ஹன்னா, சிரித்தவாறே இந்தியாவின் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிக்கான கிரீடத்தைச் சூடினார். ஐஸ்வர்யா ராய் உலகமே கொண்டாடும் உலக அழகியானார்.

இன்று அவருக்கு 50 வயது.

இன்றும் உலக அழகியாக பலரது மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் ஐஸ்வர்யா ராய் பற்றிய 10 விஷயங்கள்.

1.1990-களில் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக மகுடம் சூடுவதற்கு முன்பே, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 9-வது படிக்கும் போது இவர் விளம்பரத்தில் நடித்தார். கேம்லின் பென்சில் பற்றிய விளம்பரம் அது. 1993-ல் இவர் ஆமீர்கானுடன் பெப்சி விளம்பரத்தில் நடித்தார். இது ஐஸ்வர்யா ராயை பிரபலமாக்கியது.

2.உலக அழகியான பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதுதான் வாடிக்கை. ஆனால் ஐஸ்வர்யா ராஜ் உலக அழகியாவதற்கு முன்பாகவே நான்குப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் மிஸ். இந்தியா பட்டத்தை வெல்ல வேண்டுமென்பதற்காகவே தேடி வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். மிஸ். இந்தியா பட்டம் வேண்டாம் என்று அவர் நினைத்திருந்தால், ’ராஜா ஹிந்துஸ்தானி’ பட த்தின் கதாநாயகியாக அறிமுகமாகி இருப்பார்.

3.ஆரம்ப காலத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு மருத்துவர் ஆக வேண்டுமென விரும்பினார். விலங்கியல் அவருக்குப் பிடித்த பாடம். ஆனால் பின்னாளில் மும்பையில் இருக்கும் ரச்சனா சன்சத் அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்ச்சர் கல்லூரியில் ஆர்க்கிடெக்ச்சர் படித்தார்.

4.இயக்குநராகும் ஆசை ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நுழைந்த போதிலிருந்தே இருந்து வருகிறது. ஆனால் அது எப்போது நடக்கும் என்பது அவருக்கே தெரியாது.

5.உலகப்புகழ் பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து ஜூரியாக கலந்து கொண்ட முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஐஸ்வர்யா ராய். 2003-ல் நடைப்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் அவர் ஜூரியாக கலந்து கொண்டது அன்றைய தலைப்புச்செய்தி. அதேபோல் மேடம் துஸாட்டில் மெழுகு வைக்கப்பட்ட இரண்டாவது இந்திய நட்சத்திரமும் இவரே. முதல் சிலை இவரது மாமனார் அமிதாப் பச்சனுக்கு வைக்கப்பட்டது.

6.ஐஸ் என்ற இவரது செல்லப் பெயர் இன்று இந்தியா முழுவதிலும் பிரபலம். வீட்டிலும் கூட இவரை யாரும் உலக அழகி என்று பார்ப்பது கிடையாது. புகுந்த வீட்டில் இவரை ‘குலு மாமி’ என்றுதான் செல்லமாக அழைக்கிறார்கள்.

7.ஐஸ்வர்யா ராய்க்கு அரோமாதெரபி என்றால் ரொம்ப பிடிக்கும்.

8.டயட்டுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் ஆகவே ஆகாது. உடற்பயிற்சிக்கும் இவருக்கு பெரிய சம்பந்தமும் இல்லை. ஆனாலும் இவரது அழகு இயற்கையில் கொடையாகவே இருக்கிறது.

9.ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் தனது காதலைச் சொல்லி திருமணம் செய்யலாமா என்று கேட்ட தருணம் வித்தியாசமானது. அமெரிக்காவில் ஷூட்டிங் இருந்த போது, அபிஷேக் தான் தங்கியிருந்த ஹோட்டல் பால்கனியில் இருந்தபோதுதான், காதலைச் சொல்ல விரும்பியிருக்கிறார். இதனால ஐஸ்வர்யா ராயை அந்த ஹோட்டல் பால்கனிக்கு வரவழைத்து, தனது திருமண முன்மொழிவை கூறியிருக்கிறார். உடனே ஒரு மோதிரத்தையும் அணிவித்திருக்கிறார். அபிஷேக் அணிவித்த அந்த மோதிரத்தைதான் ஐஸ்வர்யா ராஜ் ‘குரு’ படத்தில் அணிந்திருப்பார்.

10.நெதர்லாந்தில் இருக்கும் புகழ்பெற்ற Keukenhof garden-ல் இருக்கும் துலிப் மலர்களுக்கு ஐஸ்வர்யா ராயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராயின் அழகை கொண்டாடும் வகையில் அவர் பெயரை அந்த மலர்களுக்கு வைத்ததாக நெதர்லாந்து சுற்றுலா வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஹான்ஸ் வேன் ட்ரியம் கூறியதுதான் இதில் ஹைலைட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...