தேனி கண்ணன்
ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கு கொண்டாட்டமாக அமைவது கேன்ஸ் திரைப்பட விழா. இந்த ஆண்டும் கோலாகலமாக பிரான்ஸில் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஐஸ்வர்யாராய், ஊர்வசி ரவுட்டேலா உடபட பலருக்கும் ஆடை அணிந்து வருவதில் கடும் போட்டி இருந்தது. வித்தியாசமான உடைகளை உலகின் முதல் தர ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து வலம் வந்தனர். ஆனாலும் ஐஸ்வர்யா அணிந்த உடைகள்தான் அதிகம் பேசு பொருளாக இருந்தது. இந்த ஆண்டும் ஐஸ்வர்யா வித்தியாசமான உடைகளில் கலக்கி வருகிறார்.
உலகப்புகழ் ஆடை வடிவமைப்பாளர் ஃபால்குனி ஷேன் பீகாக் வடிவமைத்த இந்த உடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. கருப்பு மற்றும் வெல்ளை வண்ணத்தில் இருந்த உடையில் ஒரு பக்கம் தங்க ஜரிகையால் பூக்களின் வேலைபாடுகள் வியக்க வைத்தது. இந்த உடையில் ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது ஒட்டு மொத்த கேமராக்களும் அவரை மொய்த்தன. இதனால் இந்த ஆண்டும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வராயாகத்தான் இருப்பார். கூடுதலாக அவரது கைகளில் அடிபட்டு மாவு கட்டுடன் வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய்க்கு வயசாயிடுச்சு என்ற கமெண்டுகள் வந்தததையும் கவனிக்க முடிந்தது.
இவரோடு நடிகை ஊர்வசி ரவ்டேலா, தீப்தி சாத்வானி ஆகியோர் மின்னும் உடையில் கலந்து கொண்டனர். கண்களை கவரும் பிங்க் உடையில் கலந்து கொண்ட ஊர்வசி ரவ்டேலா ஹேட் ஸ்டோரி 4, சிரஞ்சீவி நாயகனாக நடித்த ‘வால்டர் வீரய்யா’, லெஜண்ட் சரவணா நடித்த ‘லெஜண்ட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதரி, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர். ஒவ்ருவரும் தங்கள் ஆடைகளில் கவனம் செலுத்தியிருந்ததை பார்க்க முடிந்தது. இதற்காக அவர்கள் பெரிய தொகையை செலவிடுக்கிறார்கள். ஐஸ்வர்யா மட்டும் ஒரு நாளில் அணியும் உடைக்கு 3 லட்சம் வரை செலவிடுகிறார். சில நாளில் இந்த தொகை அதிகமாகும். ஊர்வசி ரவுட்டேலா அணிந்து வந்த உடைகளும் கவனத்தை ஈர்த்தது.
இந்திய நடிகைகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்பது கடந்த சில ஆண்டுகளிலிருந்துதான் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில தனியார் அமைப்புகள் தங்கள் உடைகளை அணிந்து வருவதற்கு பாலிவுட் நடிகைகளை ஒப்பந்தம் செய்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.