No menu items!

அதிமுக பொதுக்குழு – Live அப்டேட்ஸ்

அதிமுக பொதுக்குழு – Live அப்டேட்ஸ்

ஜூன் 23 அன்று அறிவித்த படி இன்று (ஜூலை 11) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளின் லைவ் அப்டேட்ஸ்.

அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றது. தொண்டர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். 

ஜூலை 11, காலை 12.55 மணி

அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றதும். செய்தியாளர்களை சந்துத்து பேசி வருகிறார் ஜெயக்குமார்.

ஓபிஎஸ் ஒரு தரம் தாழ்ந்த மனிதரைப் போல செயல்பட்டு வருகிறார்.

– ஜெயக்குமார்

ஜூலை 11, காலை 12.50 மணி

அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றது.  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 11, காலை 12.45 மணி

அதிமுக அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ்-ஐ காவல் துறை அப்புறப்படுத்தினர்.

#BREAKING அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஜூலை 11, காலை 12.33 மணி

அதிமுக அலுவலகத்தில் போலீசார் குவிப்பு. அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் தொடர்ந்து வன்முறை வெடித்து வரும் நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்க முடிவு. ஓபிஎஸ்-ஐ அலுவலகத்திலிருந்து வெளியேற வருவாய் துறை அதிகாரிகள் வேண்டுகோள். 

ஜூலை 11, காலை 12.27 மணி

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கவுள்ளதாக தகவல்.

ஜூலை 11, காலை 12.25 மணி

முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவோடு உறவு வைத்திருக்கின்றார்

-ஈ.பி.எஸ்

ஜூலை 11, காலை 12.20மணி

ஒற்றை தலைமை கோரிக்கையை கடைசி வரை ஓபிஎஸ் ஏற்கவில்லை

– ஈ.பி.எஸ்

ஜூலை 11, காலை 12.15 மணி

பொதுக்குழு மேடையில் ஈ.பி.எஸ்,

ஏதோ விபத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. விபத்திலே முக ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டார்

– ஈ.பி.எஸ்

ஜூலை 11, காலை 12.10 மணி

31 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெருமை அதிமுகவுக்கு உண்டு. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.

– ஈ.பி.எஸ்

ஜூலை 11, காலை 12.05 மணி

அதிமுகவை காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

– ஈ.பி.எஸ்

ஜூலை 11, காலை 11.55 மணி

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.

#BIGBREAKING : எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி ஆகியோர் கட்சியின் விதிகளை மீறி தன்னிச்சையாக செயல்படுவதால் அவர்களை நான் கட்சியை விட்டு நீக்குகிறேன்

-ஓ.பி.எஸ்

ஜூலை 11, காலை 11.50 மணி

அதிமுக எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரன் ஆகியோரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்.

ஜூலை 11, காலை 11.45 மணி

#BigBreaking : அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் என சிறப்பு தீர்மானம்.

ஜூலை 11, காலை 11.40 மணி

கழகத்தின் நலன் பற்றி அக்கறை இல்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓபிஎஸ்

-கே.பி. முனுசாமி

கழக கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் கே.பி. முனுசாமி

ஜூலை 11, காலை 11.35 மணி

திமுகவோடு சேர்ந்து செயல்படுகிறார் ஓபிஎஸ்

– கே.பி. முனுசாமி

ஜூலை 11, காலை 11.30 மணி

அதிமுக அலுவலகத்துக்கு வெளியே நடைபெற்ற வன்முறை குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர ஆலோசனை.

ஜூலை 11, காலை 11.25 மணி

பொதுகுழுவுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றவர் ஓபிஎஸ்

-திண்டுக்கல் சீனிவாசன்

ஜூலை 11, காலை 11.15 மணி

ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானத்தை இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கொண்டுவருவார்.

-கே.பி. முனுசாமி

ஜூலை 11, காலை 11.10 மணி

அதிமுகவிலிருந்து ஓபிஎஸை நீக்க கோரி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

-கே.பி. முனுசாமி

அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு தடை கல்லாக இருந்த ஓபிஎஸ் என்ற பிரச்சனை இன்றோடு முடிக்கப்பட்டது.

-நத்தம் விஸ்வநாதன் கடும் சாடல்

ஜூலை 11, காலை 11.03 மணி

அதிமுக தலைமை கழகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கட்சி அலுவலகம் மற்றும் சொத்துகளை சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலைக்கு, கட்சி தொண்டர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

ஜூலை 11, காலை 11.00 மணி

ஓபிஎஸ், பொறாமை பிடித்தவர். துரோகம் செய்வதில் தயவு தாட்சனையே காட்டமாட்டார் ஓபிஎஸ்.


-நத்தம் விஸ்வநாதன் சாடல்

ஜூலை 11, காலை 10.55 மணி

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் தொடர் மோதல். இரு தரப்பினரும் ரோட்டில் கல் வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

144 தடை அமல்படுத்தியும் வன்முறை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

உள்ளே ஒன்று வைத்து புறம் வேறொன்று பேசுபவர் ஓபிஎஸ்.

-நத்தம் விஸ்வநாதன் சாடல்

ஜூலை 11, காலை 10.50 மணி

அதிமுகவில் ஒரே பிரச்சனை இரட்டை தலைமை தான். திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு ஒற்றை தலைமையே தேவை.

 -நத்தம் விஸ்வனாதன்

ஜூலை 11, காலை 10.30 மணி

தற்போது வரை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்து தீர்மானம்.

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதில் பொதுச் செயலாளர் பதவி கொண்டுவர தீர்மானம்.

இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ். 

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அதிமுகவில் குறைந்தது 10 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஆகியவை உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

ஜூலை 11, காலை 10.15 மணி

அதிமுக அலுவலகம் இருக்கும் ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு.

ஜூலை 11, காலை 10.00 மணி

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.

ஜூலை 11, காலை 9.50 மணி

அரசியல் முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால், அதிமுக எழுச்சி பெற ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம்.

அதிமுகவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல்.

செயற்குழு கூட்டம் நிறைவடைந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

ஜூலை 11, காலை 9.40 மணி

பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் தீர்மானம் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்.

ஜூலை 11, காலை 9.30 மணி

மீண்டும் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க கூட்டத்தில் ஒப்புதல்.

ஜூலை 11, காலை 9.20 மணி

செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 11, காலை 9.15 மணி

திட்டமிட்ட படி தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி 16 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம் என தகவல்.

ஜூலை 11, காலை 9.10 மணி

அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொது குழுவிற்கு தடைவிதிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தார்.

ஜூலை 11, காலை 8.50 மணி

பொதுக்குழு நடைபெறும், சென்னை வானகரத்தில் உள்ள  ஸ்ரீவாரு மண்டபத்திற்கு வந்தடைந்தார் ஈபிஎஸ். 

14 தீர்மானங்கள் நிறைவேற்ற ஏற்பாடு தீவிரம் என தகவல்.

ஜூலை 11, காலை 8.45 மணி

அதிமுக தலைமை அலுவலகம் வந்தடைந்தார் ஓபிஎஸ். அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் அதிரடி படை போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 11, காலை 8.05 மணி

அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓபிஎஸ். ஈபிஎஸுக்கு போட்டியாக பெரும்பான்மையை காட்ட ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்தில் கூடுவதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து அறிவிப்பு

ஜூலை 11 காலை 8.00 மணி

பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து காலை 6.50 மணியளவில் புறப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம், சேத்துப்பட் வழியாக வானகரம் வர திட்டம். 

வழியெங்கும் அதிமுக கொடி பிடித்து தொண்டர்கள், ஈபிஎஸுக்கு உற்சாக வரவேற்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...