No menu items!

5 அமைச்சர் பதவி! – மோடிக்கு நிபந்தனை விதிக்கும் சந்திரபாபு நாயுடு

5 அமைச்சர் பதவி! – மோடிக்கு நிபந்தனை விதிக்கும் சந்திரபாபு நாயுடு

நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் டெல்லியில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்களை தங்களுடன் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியும், பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அடம்பிடிக்கும் சந்திரபாபு நாயுடு:

கடந்த 2 மாதங்களுக்கு முன்புவரை சந்திரபாபு நாயுடுவை சீந்துவார் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நாயுடுவின் கட்சி பெற்றிருக்கும் 16 எம்பிக்களால் டெல்லியில் அவர் செல்லும் இடமெல்லாம் சிவப்பு கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்பு அளிக்கிறார்கள். தேவைப்பட்டால் தெலுங்கு தேசம் கட்சியுடன் பேசுவேன் என்று சரத் பவார் சொன்னது, அவரது கிராக்கியை அதிகப்படுத்தி உள்ளது.

சந்திரபாபு நாயுடு கூட்டணியை விட்டு வெளியேறி விடுவாரோ என்ற பதற்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்க, தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தான் நீடிப்பதாக இன்று காலையில் அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அதே நேரத்தில் பாஜக தலைமையிடம் அவர் தனது பேரத்தை அதிகரித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 5 அமைச்சர் பதவிகள் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் பதவியை தனது தெலுங்கு தேசம் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் அவர் அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் தீர்மானத்தை உடனே கொண்டுவர வேண்டுவர வேண்டும் என்பதும் அவரது நிபந்தனையாக இருக்கிறதாம்.

ஒரே விமானத்தில் நிதிஷ் குமார் – தேஜஸ்வி

பிஹார் மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணிகளை மாற்றுபவர் நிதிஷ் குமார். இந்தியா கூட்டணியில் இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியா கூட்டணிக்கு தாவினார். அவரை மீண்டும் இந்தியா கூட்டணிக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் இன்று காலை பிஹாரில் இருந்து டெல்லிக்கு, லாலுவின் மகன் தேஜஸ்வியுடன் அவர் ஒரே விமானத்தில் பயணித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. விமானத்தில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.

இந்தியா கூட்டணிக்கு மீண்டும் வருவீர்களா என்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதற்கான காலம் கடந்துவிட்டது” என்று பதிலளித்துள்ளார் நிதிஷ் குமார். இது பாஜகவின் வயிற்றில் பால் வார்த்தாலும், மத்திய அரசில் முக்கிய இலாகாக்கள், பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்று அடுக்கடுக்காக தனது நிபந்தனைகளை அவர் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவினரை டென்ஷனாக்கி உள்ளது.

சிவசேனா இணையுமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பாஜக இரண்டாக உடைத்தது. இதில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. மகாராஷ்டிர முதல்வராக அப்பிரிவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தாலும், பாஜக தங்களை மதிப்பதில்லை என்று அக்கட்சியினர் புலம்பி வருகிறார்கள். இந்த கட்சி இப்போது 7 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த நேரத்தில் ‘என்ன இருந்தாலும் நீங்க எங்க பசங்கதான். அதனால திரும்பி வாங்க’ என்று அந்த கட்சியின் எம்பிக்களுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ரகசிய பேசு நட்த்தி வருகிறது. ஏற்கெனவே பாஜகவின் சில செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருக்கும் அவர்கள் இந்த அழைப்பை ஏற்பார்களா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதனால் அவர்களையும் சமாதானப்படுத்த வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது.

இப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், தனது கூட்டணி கட்சிகளை தக்கவைக்க பெரிய போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...