No menu items!

சமந்தாவுக்கு 30 கோடி நஷ்டம்!

சமந்தாவுக்கு 30 கோடி நஷ்டம்!

மையோசிடிஸ் என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையை முழுமையாக குணப்படுத்துவதற்காக அமெரிக்கா செல்கிறார் சமந்தா.

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சூழல் உருவானதால், சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

’புஷ்பா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் சம்பளத்தை ஏற்றிய உற்சாகம் சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. ’சிடாடல்’ வெப் சிரீஸில் நடிக்க சமந்தா 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இதையடுத்து, தனது மார்க்கெட் கொஞ்சம் பிக்கப் ஆகி இப்போது 10 கோடி சம்பளம் கேட்க ஆரம்பித்த நிலையில்தான் ப்ரேக் எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறார் சமந்தா.

இதனால் அவரது கால்ஷீட் மேனேஜர் வட்டாரம், ரொம்பவே கவலையில் இருக்கிறதாம். ஆறு மாதத்தில் இரண்டுப் படங்கள் நடித்தால் சுமார் 15 முதல் 20 கோடி வருமானம் வரும். சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுக்கும் சூழல் ஏற்பட்டால் ஒரு வருடம் இப்படியே போய்விடும். அப்படிப்பார்த்தால் சுமார் 30 கோடி நஷ்டம் வரும் என்று கணக்குப் போட்டு பார்த்து கால்ஷீட் மேனேஜர் வட்டாரம் டென்ஷனில் இருக்கிறதாம்.


கமல் அவமதிக்கப்பட்டாரா?

கமல், இப்பொழுது பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ [Kalki 2898 AD] படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம்.

இப்படம், கல்கி அவதாரத்தை அடிப்படையாக வைத்து புனையப் பட்ட கற்பனை கதையில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் அமெரிக்காவில் காமிக்-கான் 2023 நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் லுக்  காமிக்-கான் நிகழ்வில் விளம்பரத்திற்காக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

அதனால் கமல் இந்நிகழ்வில் கலந்து கொள்வதும், அவரது சினிமா பயணத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பர நிகழ்வில் கமல் சம்பந்தப்பட்ட காட்சியோ அல்லது புகைப்படமோ வெளியிடப்படவில்லை. இதைப் பார்த்து கோலிவுட்டில் கமலை கூப்பிட்டு வைத்து அவமதித்துவிட்டார்கள். அவரை இருடடிப்பு செய்து விட்டார்கள் என்ற முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.

இது குறித்து விசாரித்தபோது, கமல் ’இந்தியன் – 2’ பட வேலைகள் முழுமையாக முடிந்ததும் ’கல்கி 2898 ஏடி’ படத்தில் இணைய இருக்கிறாராம். அதனால் கமல், வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் கலந்து கொள்ள முடியுமாம். மேலும் கமலின் தோற்றத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்க இப்படத்தின் இயக்குநர் விரும்புகிறாராம். அதனால்தான் கமல் தோற்றத்தை இந்நிகழ்வில் வெளியிடவில்லையாம். மற்றபடி கமலை அவமதிக்கும் நோக்கம் எல்லாம் இல்லை  என்கிறார்கள்.


விஜய் Vs மகேஷ்பாபு

விஜய் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரும்  திருப்புமுனை கொடுத்தப் படங்களில் ’திருமலை’  அடுத்து ’கில்லி’ இவை இரண்டும் முக்கியமானவை.

இதில் ’கில்லி’ படத்தைப் பொறுத்தவரை, தெலுங்கில் ஹிட்டடித்த படம். அங்கே ’ஒக்கடு’ என்ற பெயரில் மகேஷ் பாபு நடித்திருந்தார். ஒக்கடு கதையை தமிழ் சினிமாவிற்கு ஏற்றப்படி கொஞ்சம் டிங்கரிங் வேலைகளைப் பார்த்து இயக்குநர் தரணி இயக்கியிருந்தார்.

’கில்லி’ படத்திலிருந்து விஜய் தெலுங்கு சினிமாவின் ப்ரின்ஸ் என்று கொண்டாடப்படும் மகேஷ் பாபுவை பார்த்து பல விஷயங்களை தனது படங்களில் முயற்சிப்பது வழக்கம். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் விஜயிடம் மகேஷ் பாபுவின் தாக்கம் இருப்பதை இவர்கள் இருவருடைய படங்களைப் பார்த்தவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும்.

விஷயம் என்னவென்றால், அப்பேர்பட்ட மகேஷ் பாபு இன்னும் விஜயின் சம்பளத்தை எட்டிப்பிடிக்கவில்லை.

ஆனால் தற்போது அவர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு சம்பளமாக 78 கோடி மற்றும் ஜி.எஸ்.டி-யை சேர்த்து சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். அதாவது இவரது சம்பளம் தோராயமாக 92 கோடி வருகிறது. மகேஷ் பாபு வாங்கிய சம்பளத்தில் இதுவே உச்சம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் விஜயின் சம்பளம் இப்போது 150 கோடியை தொட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...