No menu items!

மூன்றாம் மகுடத்தை குறிவைக்கும் கேகேஆர்

மூன்றாம் மகுடத்தை குறிவைக்கும் கேகேஆர்

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடுத்ததாக அதிக முறை கோப்பையை வென்ற அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்). பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு சொந்தமான இந்த அணி, 2 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாம் முறை கோப்பையை கைப்பற்றும் ஆவலுடன் இப்போது கோதாவில் குதிக்கிறது.

கடந்த ஆண்டு இறுதிச் சுற்றுவரை முன்னேறி நூலிழையில் கோப்பையை தவறவிட்ட கேகேஆர், விட்டதைப் பிடிக்கும் எண்ணத்துடன் இந்த ஐபிஎல்லில் நுழைகிறது.

ஏலத்துக்கு முன்னரே ஆந்திரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரைத் தக்கவைத்திருந்த கேகேஆர், இந்த ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயர் (ரூ.12.25), நிதிஷ் ராணா (ரூ.8 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.7.25 கோடி), அலெக்ஸ் ஹேல்ஸ் (ரூ.1.50 கோடி), ரஹானே (ரூ.1 கோடி)  உள்ளிட்டோரை வாங்கியது. இந்த அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயரும், பயிற்சியாளராக முன்னாள் நியூஸிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பலம்:

ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஸ்ரேயஸ் ஐயர், ஆந்திரே ரஸ்ஸல், சுனில் நரைன் என்று மற்ற அணிகள் பொறாமைப்படும் அளவுக்கு வலுவான பேட்டிங் வரிசை கேகேஆர் அணியிடம் உள்ளது. இந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் தனிநபர்களாகவே ஒரு போட்டியில் வென்று கொடுக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கிறிஸ் கெயிலுக்குப் பிறகு அதிக அளவு சிக்சர்களை விளாசும் தன்மை வாய்ந்த ரஸ்ஸல் அணியில் இருப்பது கேகேஆருக்கு கூடுதல் பலம்.

பலவீனம்:

மற்ற அணிகள் எல்லாம் ஒன்றுக்கு ரெண்டாக சிறந்த கீப்பர்களை வைத்திருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோ, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் ஐபிஎல்லுக்கு வருகிறது. அனுபவமுள்ள விக்கெட் கீப்பர்கள் இல்லாததால், கீப்பிங்கில் அதிக அளவில் சாதிக்காத ஷெல்டன் ஜாக்சன், சாம் பில்லிங்ஸ் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை ஆடவைக்க வேண்டிய நிலைக்கு கேகேஆர் தள்ளப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பிங்கைப் போலவே வேகப்பந்து வீச்சிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சற்று பலவீனமாக உள்ளது.

கடந்த ஐபிஎல்லில் ரஸ்ஸல் அவ்வளவாக பந்துவீசாத நிலையில், கம்மின்ஸ், உமேஷ் யாதவ், சிவம் மவி ஆகியோரையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிதாக நம்பியுள்ளது. இதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பலவீனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...