No menu items!

அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி

அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி

AK61 (அடுத்த படம்) படத்தில் அஜித்தின் கெட்டப்தான் இது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


ரசிகர்களுக்கு அடிக்கடி அதிர்ச்சி கொடுப்பது அஜித்தின் (AK) வழக்கம். சில சமயங்களில் அது இன்ப அதிர்ச்சியாகவும், சில சமயங்களில் எதிர்மறை அதிர்ச்சியாகவும் இருக்கும்.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என்று அழைக்கக்கூடாது என ரசிகர்களுக்கு உத்தரவிட்டது போன்றவை ‘AK’ கொடுத்த எதிர்மறை அதிர்ச்சிகள் என்றால், நேற்று சமூக வலைதளங்களில் வெளியான ‘AK’-ன் புகைப்படம், அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

பொதுவாக தனது திரைப்படம் வெளியாகி சில நாட்கள் பொறுத்திருந்துதான் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் ‘AK’. அதிலும் சமீப காலமாக அவரது படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வெளியாகி வருகின்றன. ‘விஸ்வாசம்’ வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆன பிறகே ‘வலிமை’ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த சூழலில் ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, தனது அடுத்த படத்துக்கு ‘AK’ திட்டமிட்டுள்ளதாக சில தினங்களாக கோலிவுட்டில் செய்தி பரவியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘வலிமை’ படத்தின் இயக்குநர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகியவற்றைத் தொடர்ந்து ‘AK’வை வைத்து வினோத் இயக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும் என்றும் கூறப்பட்டது.

அஜித்தின் கெட்டப்

இந்தச் சூழலில் சமுக வலைதளங்களில் நடிகர் ‘AK’-வின் புகைப்படம் ஒன்று நேற்று வேகமாக பரவியது. AK61 (அடுத்த படம்) படத்தில் அஜித்தின் கெட்டப்தான் இது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

த்ரில்லர் படமான இதில், நாயகன், வில்லன் என இரு வேடங்களில் நடித்து தனது ரசிகர்களுக்கு டபிள் ட்ரீட் கொடுக்கவுள்ளாராம் ‘AK’. இதில் அவர் ஏற்று நடிக்கும் ஒரு பாத்திரத்தின் கெட்டப்தான் இது. ‘AK’ ஏற்கெனவே ‘வாலி’ படத்தில் நாயகன், வில்லன் ஆகிய 2 பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார் என்பதும், ‘மங்காத்தா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AK61 படத்தின் ஷூட்டிங் மார்ச் 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாகவும் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சென்னை அண்ணா சாலையின் பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் முதல் த்ரில்லர் படம் இது என்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...