ஒமைக்ரானின் வீழ்ச்சிக்குப் பிறகு, தற்போது தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது.
கரோனா போட்ட ஆட்டத்தால், கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து துறைகளும் நொறுங்கிப்போனது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட துறையாக சினிமாத் துறை உள்ளது. இந்த காலகட்டத்தில் கரோனாவால் சினிமா இண்டஸ்ட்ரியே பேக்கப் ஆகிவிட்டது.
ஒமைக்ரானின் வீழ்ச்சிக்குப் பிறகு, தற்போது தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இயக்குநர்கள் நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் புது அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் இயக்குநர் விஜய் சந்தர்.
சிம்புவை வைத்து ‘வாலு’, விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’, விஜய் சேதுபதியை வைத்து ‘தங்கத்தமிழன்’ ஆகிய படங்களை இயக்கிய அதே விஜய் சந்தர்தான்.
ஃப்லிம் வொர்க்ஸ் என்ற பேனரில் புதிய படமொன்றை தயாரிக்கிறார் விஜய் சந்தர். கதாநாயகியை மையமாக கொண்ட இக்கதையில்தான் கதையின் நாயகியாக மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரீயாகிறார் ஹன்ஸிகா.
சமீபகாலமாக, சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருந்த ஹன்ஸிகா, தற்போது சினிமாவிலும் பிஸியாக இருக்கவேண்டுமென இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். சம்பள விஷயத்திலும் கூட இப்போது ஹன்ஸிகா கெடுபிடி காட்டுவதில்லை என்கிறார்கள்.
வெல்கம் பேக் ஹன்ஸிகா!!