No menu items!

நிக்கி கல்ராணி – ஆதி திருமணமா?

நிக்கி கல்ராணி – ஆதி திருமணமா?

தமிழ் திரையுலகில் ஈரம், மிருகம், மரகத நாணயம் போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகர் ஆதி. சமீபத்தில் வெளியான ’கிளாப்’ மூவி ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த்து பார்ட்னர் படத்தில் ஹன்சிகா மோத்வானி ,யோகி பாபுவுடன் நடித்து வருகிறார்.

பார்ட்னர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது தனக்கு லைஃப் பார்ட்னரையும் தேர்ந்தெடுத்துவிட்டார் என்ற செய்திகள் வந்திருக்கிறது. நிக்கி கல்ராணிதான் அந்த பார்டனர் என்கிறது அந்த செய்திகள்.
நிக்கிகல்ராணி இது குறித்து பேச மறுக்கிறார். ஆதியிடம் கேட்டால், ’எனது திருமணம் குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வரும். இருவீட்டர் சம்மதத்துடன் ஆலோசித்து பேசி நானே அறிவிப்பேன் காதல் திருமணம் தான்’ என்று கூறுகிறார்.

காதல் திருமணம் என்று கூறுபவர் காதலி நிக்கிகல்ராணியா என்பதையும் தெரிவித்திருக்கலாம்.

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சினிமா நடிகர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் இடையே தொடர்புகள் இல்லாமல் இருந்தது. இப்படி ரசிகர்களை சந்திக்காமல் இருந்த நடிகர்களில் ஒருவர் அருண்விஜய். இந்நிலையில் கரோனா அலை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து அவர் தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது தென் சென்னை மாவட்ட நிர்வாகி கே..ஸ்ரீதரின் பிறந்தநாள் என்பதை அறிந்த நடிகர் அருண் விஜய் அவருடைய பிறந்த நாளுக்கு கேக் வெட்டி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

நல்ல படங்களில் நடித்து இன்ப அதிர்ச்சி தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

திரைக்கு வரும் மிதாலி ராஜின் கதை!

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சபாஷ் மிது’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது.
இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திறமை மிகு நடிகரான விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சபாஷ் மிது, மிதாலியின் பெருமை மிகு பயணத்தையும், உலக அரங்கில் அவரது எழுச்சியையும் திரையில் கொண்டு வருவதற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

சபாஷ் மிதாலி.

விஜய்சேதுபதியால் நிற்கிறதா வெற்றிமாறன் திரைப்படம்?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் நடிகர் சூரியை நாயகனாக வைத்து ‘விடுதலை’ என்ற படத்தைத் தொடங்கினார். ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. போலீஸாக சூரி நடிக்கும் இப்படத்தில் ஒரு கைதியாக விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. 60 சதவீத காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் இப்போது தாமதமாகி வருகிறது. விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியில் எடுக்கப்பட்டு வரும் ’பேமிலி மேன்’ வெப் சீரீஸ் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதாகவும், இதனால் கடுப்பான வெற்றிமாறன் ’விடுதலை’ படத்தை பாதிலேயே நிறுத்திட்டு, தனது அடுத்த படமான ’வாடிவாசல்’ படப்பிடிப்பை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...