No menu items!

இயக்குநர் பாலா விவாகரத்து: அரசியல்வாதியின் மகன் காரணமா?

இயக்குநர் பாலா விவாகரத்து: அரசியல்வாதியின் மகன் காரணமா?

அரசியல்வாதியின் வீட்டுக்கு முத்துமலர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி செல்லும்போது அரசியல்வாதியின் மகனுக்கும், முத்து மலருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இது விவாகரத்துகளுக்கான காலம் போல… நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிக நாள் ஆகவில்லை. அதற்குள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாலா. ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த இவர், ‘நந்தா’, ‘பிதாமகன்’ ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’என பல ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய ‘தாரை தப்பட்டை’, ‘நாச்சியார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக 2017-ம் ஆண்டில் வெளியான ‘நாச்சியார்’ படத்துக்குப் பிறகு இவரது படம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த சூழலில் தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்யப்போவதாக பாலா அறிவித்துள்ளார். பாலாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தோம். விவாகரத்துக்கு காரணமாக அவர்கள் கூறிய விஷயங்களைப் பார்ப்போம்:

பாலாவுக்கும், முத்து மலருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு புயல் வீசியதற்கு காரணம் ஒரு அரசியல்வாதியின் மகன். பாலாவின் மனைவியும் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவர்ஃபுல் அரசியல் தலைவரின் மருமகளும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்த பழக்கம் காரணமாக அரசியல்வாதியின் வீட்டுக்கு முத்துமலர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்படி செல்லும்போது அரசியல்வாதியின் மகனுக்கும், முத்து மலருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக பலப்பட, பாலாவை அவரது மனைவி ஒதுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் பாலாவும் அவரது மனைவியும் சுமார் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இதுபற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானபோது அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் அமைதி காத்துள்ளார் பாலா. இந்தச் சூழலில்தான் இப்போது அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...