சமந்தா ருத் பிரபு, பெயரே எல்லா புகழையும் சொல்லிவிடுகிறது. இன்றைய இளைஞர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் சமந்தா… அவருக்கு இன்று பிறந்த நாள். Happy Birthday Samantha.
அப்பா தெலுங்கு. அம்மா மலையாளம். படித்தது வளர்ந்தது தமிழ்நாட்டில் சென்னையில்.
“ யே மாயா சேஸாவே ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் 2010ல் அறிமுகமாகி, சிறந்த அறிமுக நடிகை என்ற விருதும் பெற்றவர்.
தமிழில் அறிமுகமானது “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில். சின்ன கதாபாத்திரம்தான். ஆனாலும் இன்று பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார். காரணம் திறமை. உழைப்பு.
தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் கச்சிதமாக தன்னை பொருத்திக்கொள்ளும் சமந்தா, அனைத்து வித கதாபாத்திரங்களுக்கும் தயாராக இருந்தார். “நீ தானே என் பொன்வசந்தம்” படத்தில் நடிப்பை வெளிக்காட்டிய சமந்தா ‘அஞ்சான்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் தனது இளைமைத் துள்ளலை வெளிக் காட்டினார்.
நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்துக்கு முன் வெளிவந்த ராஜமவுலியின் ‘நான் ஈ’ திரைப்படம் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது.
தமிழில் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது விஜய்யின் கத்தி. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான். தனுஷுடன் தங்கமகன், விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள, மீண்டும் விஜய்யுடன் தெறி என சமந்தாவின் கிராஃப் உயர்ந்துக் கொண்டே சென்றது. தெலுங்கிலும் வாய்ப்புகள் அதிகரிக்க அந்தப் பக்கம் அதிக கவனத்தை திருப்பினார் சமந்தா.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவும் தமிழ் திரையுலகில் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் அதிகம் நடித்து வந்த சமந்தா, “தீயா வேல செய்யணும் குமாரு” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க, சமந்தாவுக்கும் நடிகர் சித்தார்த்க்கும் இடையிலான காதல் பற்றிய செய்திகள் மக்களிடம் பரவத்தொடங்கியது. அதிகமாக விமர்சிக்கப்படாமல், எந்த சர்ச்சையிலும் சிக்காத சமந்தாவின் முதல் சர்ச்சை இதுவாகவே இருந்தது. ஆனாலும் அவர் அது குறித்து அவர் மெளனம் காத்தார்.
விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில், அவரது “நீ தானே நீ தானே” பாடல், ஓர் ஆண்டுக்கு மக்கள் முணு முணுக்கும் வகையில் அமைய, அவற்றை மக்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கும்போதே நீதானே நீதானே என்று தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிக்க தயக்கம் காட்டும் போதும் தனது கனவருடன் நடிப்பதை தாண்டிய சமந்தா,சூப்பர் டிலக்ஸ், யூ-டர்ன் பொன்ற படங்களில், மனதில் நிற்கும் அட்டகாசமான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வந்தார். பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இப்படியே நான்கு ஆண்டுகள் கடக்க, சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவிக்க. திரையுலகில் அதிர்ச்சி.
விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
தனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளை புறந்தள்ளி திரையுலக வாழ்க்கையை உற்சாகமாய், வெற்றிகரமாய் மேலும் கவர்ச்சியாய் தொடர்ந்தார்.
விவாகரத்துக்கு பின் வெளியான புஷ்பா படப் பாடலான “ஊ சொல்றியா மாமா” பாடலே அதற்கு சாட்சி.
ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரில் அவர் ஈழத் தமிழ் போராளியாக நடித்தார். சில அந்தரங்க காட்சிகளும் அவருக்கு இருந்தன. அந்தத் தொடரில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
சமந்தாவுக்கு இப்போது 35 வயதாகிறது என்று விக்கிபீடியா அவரது வயதை குறிப்பிடுகிறது.
அப்படியா தெரிகிறார் சமந்தா? எப்போதும் அவர் ஸ்வீட் சிக்ஸ்டீன் சமந்தாதான்.
Happy Birthday Samantha.