ஊரெல்லாம் மீண்டும் கொரோனா பற்றிய பேச்சு தொடங்கியிருக்க, மருத்துவமனையில் இருப்பதுபோல் நடிகை குஷ்பு இன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்படம் கோலிவுட்டில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பதிவிட்ட செய்தியைப் படிக்காமல் படத்தை மட்டும் பார்த்த குஷ்பு ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போனார்கள். கீர்த்தி சுரேஷ், ராஷிகன்னா, ஸ்ரேயா உள்ளிட்டவர்கள் அவரை நலம் விசாரித்து பின்னூட்டம் இட்டிருந்தனர்.
ஆனால் அப்படி டென்ஷனாகும் அளவுக்கு தனக்கு பெரிய பாதிப்பெல்லாம் இல்லை என்று அந்த படத்துக்கு பக்கத்திலேயே ஒரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார் குஷ்பு. காய்ச்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ப்ளூ காய்ச்ச்சல் தொடர்பான அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் அந்தப் பதிவில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அனைவரும் தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டுமென்றும் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.