No menu items!

பிரிட்டன் –  ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம் – முதல்வர் ஸ்டாலின்

பிரிட்டன் –  ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம் – முதல்வர் ஸ்டாலின்

பிரிட்டன் –  ஜெர்மனியில்  ரூ. 15,516 கோடி முதலீடுகள் பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளாா். ஏற்கெனவே ரூ. 7,020 கோடி மதிப்பிலான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜெர்மனி நிறுவனங்களுடன் கையொப்பமாகின.

இந்த நிலையில், பிரிட்டன் பயணத்தில் இதுவரை 7 நிறுவனங்களுடன் ரூ. 8,496 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் மின்சார வாகனச் சந்தையில், பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமைக்க ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 1,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கவுள்ளது.

ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ’தமிழகம் வளர்கிறது’ திட்டத்தில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் ரூ. 15,516 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளோம். இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்கவுள்ளது.

இவை வெறும் எண்கள் அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது திராவிட மாடலின் உத்வேக செயல்பாடு.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனி

26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ரூ. 7,020 கோடி மதிப்பிலான முதலீடுகள்15,320 வேலைவாய்ப்புகள்

பிரிட்டன்

7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ரூ. 8,496 கோடி மதிப்பிலான முதலீடுகள்2,293 வேலைவாய்ப்புகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...