இப்போது பிஸ்னஸ் செய்பவர்களும், தனிநபர்களும் வாட்ஸ் ஆப்பை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே வாட்ஸ்அப் செயலி மாறியுள்ளது. இதை அறிந்து கொண்ட மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப்புக்கு அடிக்கடி நல்ல பயனுள்ள அப்டேட்டுகளை தந்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள 3 புதிய வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் என்ன என்பதை காணலாம்
முதல் அப்டேட், யாருக்கும் தெரியாமல் குரூப்பை விட்டு வெளியே போகலாம்.
பலருக்கு இது ஒரு குடைச்சலாக இருந்தது. நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருப்பவர்கள் பல வாட்ஸ்அப் குரூப்புகளில் இருப்பர். சில நேரம் அது போல ஏதாவது குரூப்பில் இருந்து வெளியே வந்துவிட்டால், நம் பெயரோடு குரூப்பில் இருந்து வெளியேறி விட்டார் என்று அனைவருக்கும் தெரியும்படி காட்டிக் கொடுத்துவிடும் வாட்ஸ்ஆப். ஆனால், இனி வரும் அப்டேட்டில் இந்த கஷ்டம் இல்லை. இந்த புதிய அப்டேட்டுக்கு பிறகு, நீங்க குரூப்பை விட்டு வெளியே சென்றால் இனி உங்கள் குரூப் நண்பர்களுக்கு தெரியாது. நைஸாக எஸ்கேப் ஆகி விடலாம்.
இரண்டாவது அப்டேட், இனி நீங்கள் ஆன்லைனில் இருப்பது யாருக்கெல்லாம் காட்ட வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.
ஆன்லைனில் இருந்தும் மெசேஜ் பண்ணவே இல்லை என்று பலர் கேட்பர். காரணம் வாட்ஸ்ஆப்பில் நுழைந்த உடனே ஆன்லைன் என்று நம் பெயருக்கு கீழே காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் இனி அதிலிருந்து விடுதலை. முன்பு நமது வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் (profile picture) எல்லோரும் பார்க்கலாம், நமது நண்பர்கள் பார்க்கலாம், அல்லது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று மட்டுமே நம்மால் தேர்வு செய்ய முடிந்தது. ஆனால் இப்போது, எந்த நபர்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என்பதை நம்மால் தனித்தனியே தேர்வு செய்ய முடிகிறது. அதே போல் இப்போது நாம் ஆன்லைன் வந்தால் அதையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.
மூன்றாவது அப்டேட், ஒரு முறை காணும் மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் ( Screenshot ) எடுக்க முடியாது.
ஒரு முறை மட்டும் காண்பதற்கு சில மெசேஜ்களை நம்மால் அனுப்ப முடியும். இப்படி ஒரு முறை காணும் மெசேஜை பெறுபவர், அந்த படத்தையோ, வீடியோவையோ தனது மொபைலில் டவுன்லோட் பண்ண முடியாது என்றாலும் அதற்கு இணையாக ஸ்கிரீன் ஷாட் செய்ய முடிந்தது. இனி வரப்போகும் அப்டேட்டில் இது போல ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை வாட்ஸ்அப் தடை செய்ய முடிவு செய்திருக்கிறனர்.
இது போன்ற அப்டேட்டுகளால், வாட்ஸ்அப்பில் நமது தனியுரிமை (privacy) கண்டிப்பாக அதிகரிக்கும். ஆனாலும் எந்த ஒரு அரசு அடையாள அட்டை, முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை எந்த ஒரு ஆப்பிலும், யாருடனும் பகிர்வதற்கு முன் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.