விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன.