No menu items!

கோவாவில் திருமணம் – கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு

கோவாவில் திருமணம் – கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு

கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், 2 தினங்களுக்கு முன் தனது திருமணம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் தான் 15 ஆண்டுகளாக காதலித்து வருபவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

“15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்” என்று அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார். இந்த பதிவ்ன் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்தார்.

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் ஆண்டனிக்கு சொந்த ஊரான கொச்சியில் ரிசார்ட்ஸ் உள்ளது. ஆண்டனி, ஹபீப் ஃபீரூக் என்பவருடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக இருக்கிறார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண செய்தியை அறிவித்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்று தனது பெற்ரோருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கீர்த்தி சுரேஷுக்கு பிரசாதம் வழங்கினர். பிறகு அங்கிருந்த ரசிகர்கள் கீர்த்தியுடன் செல்பி எடுத்தனர். ரசிகர்கள் வழங்கிய பரிசுகளை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ், “நான் நடித்த பிபி ஜான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் கோவாவில் என் திருமணம் நடக்க உள்ளது. அதற்காக சாமி கும்பிட வந்தேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...