மணிரத்னம் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது நடிகர்கள் விக்ரம், பார்த்திபன், ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “நாளை படம் வெளியாகவுள்ள நிகையில் பேசுவதற்கு சற்று பதற்றமாக உள்ளது. இருந்தாலும் ஒட்டுமொத்த குழுவினரும் மகிழ்ச்சியாக உள்ளோம். கல்கி சாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு நனவாகி உள்ளது” என்றார்.
நடிகர் விக்ரம் பேசும்போது, “வரலாற்றுப் படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். நான் கனவில் நினைத்த கதாபாத்திரம் இப்படத்தில் எனக்கு அமைந்துள்ளது. சில படங்களில் வேறு கதாநாயர்களுடன் நடித்துள்ளேன். இப்படி பல நடிகர்களுடன் நடித்துள்ளது இதுதான் முதல்முறை கார்த்தியும் ஜெயம் ரவியும் என் நண்பர்கள். விக்ரம் பிரபு என் பெயரைக் கொண்டவர் என்பதில் மகிழ்ச்சி. இப்படத்துக்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு கிடைக்கிறது, அனைவரும் திரையரங்குக்கு வந்து இப்படத்தைப் பார்க்க வேண்டும். இது சிறந்த காதல் காவியமாக அமையும்” என்றார்.
விக்ரம் பிரபு பேசும்போது, “படத்திற்கு என்னை இயக்குனர் மணிரத்னம் அழைத்ததில் இருந்து மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கு இருப்பதே மணிரத்னத்துக்காகத்தான்” என்றார்.
நடிகை த்ரிஷா பேசும்போது, “நான் இவ்வளவு அழகாக தெரிகிறேன் என்றால் அதற்கு என் அழகு கலைஞர்கள்தான் காரணம். இந்தியா முழுவதும் சென்று நான் பேசுகிறேன் என்றால் மணிரத்தினம் சார்தான் காரணம் பல நட்சத்திரங்களுடன் இணைந்து படம் நடிப்பது இதுவே முதல்முறை. இவ்வளவு பேருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, “”நானே வருவேன்” என்று அடம் பிடித்து தான் நானே வந்தேன் இன்று காலை வந்தேன்” என்று இன்று காலையில் வெளியான ‘நானே படத்தைப் பற்றி குறிப்பிடுவதுபோல் பேசினார். மேலும் அவர் பேசும்போது “நாளை இப்படத்தினை பார்க்க என் குழந்தைகளுக்கு கூட டிக்கெட் கிடைக்கவில்லை .. அதனால்தான் நான் படம் பார்க்க தஞ்சாவூர் செல்கிறேன்” என்றார்.