No menu items!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆபத்து!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆபத்து!

பான் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கு, இம்மாதம் 31 (மார்ச், 2022) வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைக்காதவர்கள் பான் கார்டு ஏப்ரல் 1, 2022 முதல் செயலிழந்துவிடும். அதன் பின்னர், பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும், ரூ. 1000 முதல் ரூ.10,000 வரை அபராதமாக செலுத்த வேண்டி வரும்.

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண் என படிப்படியாக பலவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த சூழலில் பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது மார்ச் 31, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை ‘வழக்கம்போல் நீட்டிப்பார்கள்’ என அசால்ட்டாக இருந்துவிட முடியாது; ஏனெனில், மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் பான் கார்டு ஏப்ரல் 1, 2022 முதல் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் ‘மத்திய நேரடி வரிகள் வாரியம்’(CBDT) அறிவித்துள்ளது.

பான் கார்டு செயலிழப்பது மட்டுமல்ல, 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இன்னொரு பக்கம், வருமான வரிச் சட்டம் 272N பிரிவின் படி, பான் எண் கொடுக்க வேண்டிய ஒவ்வொரு முறையும்கூட அபராதம் செலுத்த வேண்டி வரும்.

அதாவது, செயலிழந்த பான் கார்டுகளை அக்டோபர் 1ஆம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆனால், வங்கிக் கணக்கு திறக்க, வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய, பங்கு மற்றும் ரொக்கப் பரிவர்த்தனைகளின் போது, வீடு பதிவு செய்வது, விற்பனை செய்வது எனப் பல நடவடிக்கைகளுக்கு பான் எண் கட்டாயம் தேவை. அப்போது பான் எண்ணை வழங்க முடியவில்லை என்றால், வருமான வரித்துறை சட்டம் 272B பிரிவின் படி அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதம் 1000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரைகூட இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆன்லைன் மூலம், எஸ்.எம்.எஸ். மூலம் என இரண்டு வழிகள் உள்ளன.

ஆன்லைன் மூலம் பான் – ஆதார் இணைப்பு

ஆன்லைனில் வருமான வரித் துறை தளத்தில் பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைக்கலாம்.

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் (https://www.incometax.gov.in/iec/foportal), முகப்புப் பக்கத்திலேயே ‘link aadhaar’ என்ற இணைப்பு காணப்படுகிறது. அதைக் கிளிக் செய்து பான் எண், ஆதார் எண், நம் பெயர், நம் மொபைல் எண் ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும்.

பின்னர் captcha குறியீட்டை உள்ளிட்டு OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

OTP எண்ணை உள்ளிட்ட பின்னர் ‘Link Aadhar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படும்.

SMS மூலம் பான் – ஆதார் இணைப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட நம் மொபைல் எண்ணில் இருந்து மெசேஜ்ஜில், UIDPAN என்று டைப் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிட வேண்டும். அதாவது UIDPAN <12 Digit Aadhaar No><10 Digit Pan No>. பின்னர், இதை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்படும்.

ஆதார் – பான் இணைக்கப்பட்டுள்ளதா என சரி பார்க்க

தற்போது வங்கிகளிலேயே பரிவர்த்தனையின் போது பலருக்கு பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதே தெரிவதில்லை. எனவே, இது தொடர்பாக குழப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக ஆதாரும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.

ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் வருமான வரித்துறை தளத்திலேயே ‘Link Aadhaar Status’ பிரிவில் தெரிந்துகொள்ளலாம். அதில் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் பதிவிட்டு ‘View Link Aadhaar Status’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஏற்கெனவே, நம் பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டிருந்தால் YOUR PAN IS LINKED TO AADHAAR NUMBER என்ற தகவல் வரும்.

இணைக்காமல் இருந்தாலும் அதுகுறித்த தகவல் காண்பிக்கப்படும். அப்படி இணைக்கப்படாமல் இருந்தால் மேலே குறிப்பிட்ட வழிகள் மூலமாக இணைத்துவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...