No menu items!

நியூஸ் அப்டேப்: தேசிய கல்வி மாநாடு – தமிழ்நாடு புறக்கணிப்பு

நியூஸ் அப்டேப்: தேசிய கல்வி மாநாடு – தமிழ்நாடு புறக்கணிப்பு

தேசிய கல்வி மாநாடு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் இன்றும் நாளையும் 2 நாட்கள் குஜராத்தில் நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து இந்த கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

இம்மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியோ பங்கேற்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என தமிழக அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்: பொன்னையன் பேச்சு

அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், “பாஜகவினர் `அதிமுக பின்னுக்கு தள்ளப்படும்’ என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகிறார்கள். அதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்ற்னர். இதனால், அதிமுகவினர் எச்சரிக்கையாவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

பொன்னையனின் பேச்சு, அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு

கேஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளது. 2508 ரூபாய்க்கு விற்று வந்த வணிக கேஸ் சிலிண்டர் தற்போது 2373 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

. சிதம்பரம் அசையா சொத்து மதிப்பு 135 கோடி ரூபாய்: பிரமாணப் பத்திரத்தில் தகவல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ப. சிதம்பரம், தனது பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 135 கோடி ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 5.83 கோடி மதிப்பிலான பரம்பரை சொத்தும், 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உள்ளதாகவும், ரூ. 76.46 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி நளினி சிதம்பரம் பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட ரூ.17.39 கோடி அசையும் சொத்துகளும், ரூ. 26.53 கோடி மதிப்பு அசையா சொத்துகளும் உள்ளதாகவும் ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும் ப. சிதம்பரம் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கேரளாவில் பெற்றோரால் பிரிக்கப்பட்ட லெஸ்பியன் ஜோடியை சேர்த்து வைத்த நீதிமன்றம்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின் (வயது 22). இவர் தனது லெஸ்பியன் தோழி பாத்திமா நூராவுடன் தாமரை சேரி பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இதையறிந்த பாத்திமாவின் பெற்றோர் அவரை வலுகட்டாயமாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து, மே 23-ஆம் தேதியன்று காவல்துறையில் ஃபாத்திமாவை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுவிட்டதாக ஆதிலா புகார் அளித்தார். காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரையும் சேர்த்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஃபாத்திமா நூராவின் தாய், மே 24-ஆம் தேதியன்று அவரை அதிலாவின் வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்.

இதைத் தொடர்ந்து அதிலா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைப் பதிவு செய்தார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதி கே.வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, ஆதிலா நசரின் – ஃபாத்திமா நூரா இணைந்து வாழ அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஒரே நேர்கோட்டில் தோன்றவுள்ள 5 கோள்கள்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது புதன் கோளும் இந்த அணிவகுப்பில் இணையவுள்ளது. இதனால், ஜூன் மாதம் முழுவதும், சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன.

இதனை வெறும் கண்களால் பார்க்கலாம். இவ்வாறு ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002 இல் நடந்தது. இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அரிய நிகழ்வு அடுத்த முறை 2040 இல்தான் நிகழும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...