கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட தமன்னாவை போட்டோகிராஃபர்கள் ஒளி வெள்ளத்தில் திக்குமுக்காட செய்துவிட்டனர்.
அழகாய், கவர்ச்சியாய், ஒய்யாரமாய் போட்டோகளுக்கு போஸ் கொடுத்த தமன்னா, ஒரே கேள்வியால் பவர்கட்டால் அவதிப்படும் நம்மூர் மக்களைப் போல சட்டென்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
“தென்னிந்திய திரைப்பட வாழ்க்கையுடன் உங்களுடைய ஹிந்தி திரைப்பட வாழ்க்கையை ஒப்பிடும் போது அந்தளவிற்கு இல்லையே, உங்களால் ஏன் ஹிந்தி திரையுலகில் ஜெயிக்க முடியவில்லை” என்பதே தமன்னாவை ப்யூஸ் ஆக வைத்த அந்த கேள்வி.
வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமன்னாவால் ஏன் இந்திப் படங்களில் ஜெயிக்கமுடியவில்லை என்பதற்கான காரணத்தை அவரே இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
‘‘அஜய் தேவ்கன் உடன் நடித்த ‘ஹிம்மத்வாலா’ திரைப்படம் சரியாக ஓடவில்லை. படம் ஃப்ளாப்.
நான் செய்த தவறுகளிலிருந்து நிறைய பாடங்களைக் கற்றுகொண்டு வருகிறேன். அதனால் தான் இப்பொழுது மிகக் கவனத்துடன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இப்பொழுதெல்லாம் தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதால், ஹிந்தியில் ஜெயிக்க முடியவில்லை என்ற வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று புன்னகையை தவழவிட்டிருக்கிறார் தமன்னா.