உனக்கு என்ன வேண்டும் என்று யாராவது கேட்டால் நாம் உடனே நம்மிடம் இல்லாத ஒன்றைக் குறிப்பிடுவோம். இந்த பதில்தான் எல்லோரும் தருவது.
ஆனால், கே.ஜி.எஃப் படத்துல ஒரு வசனம் வரும். ’உனக்கு என்ன வேணும்?’ என்று யஷ்ஷிடம் கேட்கப்படும்.
அதற்கு யஷ், ’உலகம் வேணும்’ என்று சொல்வார்.
இது படத்தோட வசனம் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் யஷ்ஷின் லட்சியமே இதுதான்.
2018-ல கே.ஜி.எஃப்னு ஒரு கன்னட படம் தமிழில் ரிலீசான போது அன்று ரிலீஸ் ஆன ஐந்து படங்கள்ல ஒன்றாகதான் பார்க்கப்பட்டது. ஆனால் ஆன கே.ஜி.எஃப் சாப்டர் 2 வெளி வந்தபோது நிலைமையே மாறி இருந்தது. ஏப்ரல் 14ல் வெளியான போது அதனுடன் போட்டியிட மற்ற தயாரிப்பாளர்களுக்கு தயக்கம். தமிழில் பீஸ்ட் தவிர இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் எந்த படமும் கேஜிஎஃப் 2டுடன் போட்டியிட முன் வரவில்லை.
அதற்கு காரணம் கேஜிஎஃப் 1ன் வெற்றி. யஷ்ஷின் வெற்றி.
சினிமாவில் எந்த ஒரு பின்புலமோ சிபாரிசோ இல்லாமல் 6 வருடங்களில் இரண்டு மாஸான படங்கள் கொடுத்து தன்னோட பெயரை உலகம் முழுக்க தெரிய வைத்திருக்கிறார் யஷ்.
யார் இந்த யஷ்..?
நவீன் குமார் கெளடா தான் யஷ்யோட இயற்பெயர். டெலிவிஷன்ல நுழைந்ததும் பெயரை யஷ்னு மாத்திக்கிட்டார்.
அப்பா அருண்குமார் பஸ் டிரைவர். அம்மா புஷ்பா குடும்பத் தலைவி. ஒரு தங்கை.
அப்பாவிடமிருந்துதான் அதிகம் கற்றுக் கொண்டதாக யஷ் சொல்கிறார். ஒருநாள் கூட தவறாமல் வேலைக்கு சென்று விடுவாராம். நேரம் தவறியதே இல்லை. தன்னை நம்பி பயணிக்கும் மக்கள் தன்னால் தாமதமாக போகக் கூடாது என்ற எண்ணம்தான் காரணம்.
யஷ் ஆக மாறுவதற்கு முன்பு நவீன் குமாராக இருந்தபோது அவருக்கிருந்த ஒரே ஆசை, சூப்பர் ஸ்டாரா ஆக வேண்டும் என்பதுதான். தன் ஆசையை மற்றவர்களிடம் சொல்லும்போது சிரித்திருக்கிறார்கள்.
”வீட்டில் திரைத் துறைக்கு செல்வதற்கு எதிர்ப்பு. முதலில் படிப்பை முடி என்றார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்கவில்லை. பியுசி முடித்ததும் 300 ரூபாயுடன் பெங்களுக்கு வந்து விட்டேன். வாழ்க்கை எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்த காலக்கட்டம் அது. நாடகக் குழுவில் சேர்ந்து நடிப்பு பயின்றேன். ஆனால் பெரிய நடிகனாவே என்ற நம்பிக்கை எனக்குள் தீவிரமாய் இருந்தது. அது போகவே இல்லை” என்கிறார் யஷ். முதலில் நாடகங்கள், பிறகு தொலைக்காட்சித் தொடர்கள் என்று வளர்ந்த யஷ் 2007ல் கன்னட திரையுலகுக்கு வந்தார்.
2007ல் சினிமாவுவில் அடியெடுத்து வைத்திருக்கிறார் யஷ். முதல் இரண்டு படங்களில் சிறு வேடங்கள். 2008ல் ராக்கி திரைப்படத்தில் கதாநாயகன். படம் ஓடவில்லை. அதற்கடுத்தப் படங்களும் சரியாக ஓடவில்லை.
2010ல்தான் அவருக்கு முதல் பெரிய வெற்றி. அந்த வருடம் வெளியான மொடலசாலா என்ற திரைப்படம் யாஷ்க்கு கமர்ஷியல் நாயகன் என்ற உத்தரவாதத்தை தந்தது.
அதன்பிறகு 2011, 2012,2013, 2014,2015 என்று வருடத்துக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்து கன்னட சினிமாவின் சூப்பர் நாயகனாக மாறினார். முக்கியமாய் 2014, 2015ல் அவர் நடித்த மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமச்சாரி, மாஸ்டர்பீஸ் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட். அதன் பிறகு 2018ல் கேஜிஎஃப் 1. மிக மிகப் பெரிய வெற்றி. அவர் ஆசைப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரசிகர்கள் அவருக்கு கொடுத்தார்கள்.
அதன்பிற்கு இப்போது 2022ல் கேஜிஎஃப் 2. சூப்பர் டூப்பர் வெற்றி. இந்தியா முழுவதும் வெற்றி பெற்றிருக்கிறது கேஜிஎஃப் 2. அகில இந்திய நட்சத்திரமாகிவிட்டார் யஷ்.
சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று யஷ் சொன்னபோது சிரித்தவர்கள் இன்று அவரது திரைப்படங்களுக்கு கைத் தட்டுகிறார்கள். பிரமிப்புடன் பார்க்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறார்கள்.
இலக்குகளை நோக்கி உறுதியாக பயணித்தால் வெற்றி என்பது யஷ் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.