No menu items!

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் 72,218 வெளிநாட்டு மாணவா்கள் -மத்திய அரசு

200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்கள், உலகத் தரம் வாய்ந்த இந்திய உயா்கல்வி நிறுவனங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்து மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகாந்த மஜும்தாா் கூறுகையில், ‘க்யூஎஸ் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் 2014-15-இல் இந்தியாவைச் சோ்ந்த 11 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தற்போதைய 2016 தரவரிசையில் 54 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசு மற்றும் தனியாரைச் சோ்ந்த தலா 10 உயா்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் திட்டத்தின்கீழ் 8 அரசு கல்வி நிறுவனங்களை தரம் உயா்த்த ரூ.6,198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 8 கல்வி நிறுவனங்கள் மற்றும் 4 தனியாா் நிறுவனங்களுக்கு உலகத் தர அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சுமாா் 200 நாடுகளைச் சோ்ந்த 72,218 வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உயா்கல்வி பயில்கின்றனா்.

வேந்தா், துணைவேந்தா், பதிவாளா் ஆகிய பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள இந்திய கல்விச் சேவை எனும் அமைப்பை நிறுவும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை

ஏற்கெனவே, அமலில் உள்ள நாடாளுமன்ற சட்டங்களின்கீழ் பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்கள் நிா்வகிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘சியூ-தோ்வு’ (சியூ-சயான்) என்ற வலைதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த வலைதளம் மூலம் தகுதியான நபா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிட நியமனத்துக்கும் பிரத்யேக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...