No menu items!

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

சஞ்​சார் சாத்​தி செயலி கட்டாயம் உத்தரவு வாபஸ்

ஸ்மார்ட் போன்​களில் சைபர் பாது​காப்பு செயலி ‘சஞ்​சார் சாத்​தி’ கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு நேற்று வாபஸ் பெற்​றது.

இந்​தி​யா​வில் செல்​போன் பயன்​படுத்​தும் மக்​களுக்கு சைபர் பாது​காப்பை அளிக்​கும் நோக்​கத்​தில், சஞ்​சார் சாத்தி என்ற செயலியை ஸ்மார்ட் போன்​களில் முன்​கூட்​டியே பதி​விறக்​கம் செய்து விற்​பனை செய்​யும்​படி செல்​போன் தயாரிப்பு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு சமீபத்​தில் உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை ஏற்க ஆப்​பிள் நிறு​வனம் எதிர்ப்பு தெரி​வித்​தது.

இந்த செயலி மூலம் மக்​களை மத்​திய அரசு உளவு பார்க்க திட்​ட​மிடு​கிறது என காங்​கிரஸ் உட்பட எதிர்க்​கட்​சி​யினர் குற்​றம் சாட்​டினர். மக்​களின் அந்​தரங்க உரிமைமீறல் மற்​றும் உளவு பார்க்​கப்​படு​தல் தொடர்​பான சந்​தேகங்​களை இந்த செயலி எழுப்​புவ​தாக எதிர்க்​கட்​சி​யினர் குற்​றம் சாட்​டினர். இதுதொடர்​பாக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நாடாளு​மன்​றத்​தில் பிரச்​சினை எழுப்பினர். இதற்கு மக்களவையில் நேற்று பதில் அளித்த மத்​திய தகவல் தொடர்​புத்​துறை அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்​தியா கூறிய​தாவது:

நாட்டு மக்​களுக்கு சைபர் பாது​காப்பு இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக சஞ்​சார் சாத்தி செயலி கட்​டா​யம் என்ற உத்​தரவை மத்​திய அரசு பிறப்​பித்​தது. இந்த செயலி பாது​காப்​பானது, சைபர் குற்​றங்​களில் ஈடு​படு​பவர்​களிடம் இருந்து மக்​களை காக்க இது உதவும். பாது​காப்பை தவிர வேறு எந்த செயல்​பாடும் இதில் இல்​லை. இந்த செயலியை மக்​கள் விரும்​ப​வில்லை என்​றால், அதை மற்ற செயலிகள் போல் நீக்கி கொள்​ளலாம்.

உளவு பார்க்க முடி​யாது: சஞ்​சார் சாத்தி செயலி மூலம் யாரை​யும் உளவு பார்க்க முடி​யாது. அப்​படி எது​வும் நடக்​காது. இந்த செயலி மக்​களின் பாது​காப்​புக்​கானது. மக்​கள் தங்​களை பாது​காத்​துக் கொள்​வதற்​கான சக்​தியை அரசு அளிக்க விரும்​பு​கிறது. இந்த செயலியை நீங்​கள் நீக்க விரும்​பி​னால், அவ்​வாறு செய்து கொள்​ளலாம். இது கட்​டாயமில்​லை. நீங்​கள் இந்த செயலியை பயன்​படுத்த விரும்​ப​வில்லை என்​றால் அதற்​காக நீங்​கள் பதிவு செய்ய வேண்​டாம். அது செயலற்ற நிலை​யில் இருக்​கும்.

டிஜிட்​டல் மோசடிகள் மற்​றும் திருட்​டு​களில் இருந்து தங்​களைப் பாது​காக்​கவே இந்த செயலி உள்​ளது. இந்த விஷ​யம் நாட்​டின் ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் தெரிய​வில்​லை. இந்​தச் செயலியை அனை​வருக்​கும் கிடைக்​கச் செய்​வது எங்​கள் பொறுப்​பு. எனினும், கட்​டா​யம் என்ற உத்​தரவை அரசு வாபஸ் பெற்​றுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்​தியா கூறி​னார்.

இஸ்​ரேல் நாட்​டிடம் இருந்து பெகாசஸ் உளவு மென்​பொருளை வாங்கி அரசி​யல் கட்​சித் தலை​வர்​களை உளவு பார்ப்​ப​தாக முன்பு எதிர்க்​கட்​சி​யினர் குற்​றம் சாட்​டினர். அதே​போல் தற்​போது சஞ்​சார் சாத்தி செயலி​யும் மக்​களை உளவு பார்க்​கும் செயலி என கடந்த 2 நாட்​களாக எதிர்க்​கட்​சி​யினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்து இந்​தி​யா​வில் விற்​கப்​படும் செல்​போன்​களில் சஞ்​சார் சாத்தி செயலி கட்​டா​யம் நிறு​வப்பட வேண்​டும்​ என்​ற உத்​தரவை மத்​திய அரசு நேற்​று ​வாபஸ்​ பெற்​றது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...