பிராங்க் மற்றும் சர்ப்ரைஸ் கொடுக்கும் நிகழ்வுகளை நடத்தும் நிறுவனம் வைத்திருப்பவர் அகன். அவரை ப்ரொபோஸ் செய்யும் அவரது மாமா மகள் குறளரசியின் காதலை நிராகரிக்கிறார். இதனால் மனமுடையும் அவர் மேற்படிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுகிறார்.
இந்த இடைவெளியில் மீண்டும் குறளரசி மீது காதல் கொள்ளும் அகன், இதை தனது மாமாவும் அமைச்சருமான அதியமானிடம் சென்று சொல்கிறார். உடனடியாக சம்மதம் தெரிவிக்கும் அவர், திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் தினம் அன்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லையென்றும், தான் வேறு ஒருவர் மீது காதலில் விழுந்துவிட்டதாகவும் அகனிடம் சொல்கிறார் குறள்.
இதனால் தனது காதலை மறைத்து விட்டு அகன் எப்படி குறளரசியின் காதலை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதும் அதியமான் கோபத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதுமே படம்.
பிரதீப் ரெங்கநாதன் இளம் தலைமுறையினரின் அடையாளத்தோடு அவர்களை கவர வேண்டும் என்பதற்காகவே புனிதம் என்று எதை சொல்லப்படுகிறதோ அந்த கல்யாணத்தில் கை வைத்திருக்கிறார். இயக்குனர் கீர்த்தீஸ்வரனாக இருந்தாலும் இதன் உருவாக்கத்தில் பிரதீப் இருக்கலாம் என்பதை அவரது கதாபாத்திரமே காட்டிக்கொடுக்கிறது.
கல்யாண வீட்டுக் கலாட்டாவை அப்படியே க்ளைமேக்ஸ் வரைக்கும் கொண்டு சேர்ப்பதில் பிரதீப் கீர்த்தீஸ்வரன் இருவரும் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். காதலி மமிதா பைஜுவை சுமந்து கொண்டு படம் முழுவதும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்.
பிராங்க் பண்ணும் கம்பெனி என்பதே புதிதாக இருந்தாலும் அது சில இடங்களில் எது ப்ராங்க், எது ரியல் என்பது நமக்கு குழப்பம் வருகிறது.
கதாநாயகனுக்கு ஈடு கொடுத்து நடிப்பது சரத்குமார்தான். கலகலப்பான வில்லனாக வந்து படத்தை நிறைத்துக் கொள்கிறார். அவரும் பிரதீப்பும் சந்திக்கும் இடங்களில் கரகோசம் கேட்கிறது.
மமிதா பைசூ க்யூட் ஆக்டிங் மூகம் நிறைவாக வருகிறார். திரைக்கதையை முழுவதுமாக நம்பி படத்தை எடுத்திருக்கும் கீர்த்திஸ்வரனின் முயற்சி பாதி வெற்றி. திருமணம் நடக்கும் பல காட்சிகள் நாடகத்தனமாக இருப்பதும் அதில் நம்பகத்தன்மை இல்லாததும் பலவீனப்படுத்துகிறது.
மமிதா பைஜூ மாமனாக பிரதீப்பிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையும், காதல் விளையாட்டும் பலரையும் ரசிக்க வைக்கிறது. சரத்முமாரின் பின்னணி தகவல் தெரிந்து அதிர்ச்சியில் மமிதாவோடு நாமும் உறைந்து போகிறோம்.
கதக்களத்திற்கேற்றவாறு பிரமாண்டத்தை காட்டியிருக்கிறார்கள். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கிராண்டியாராக காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசை ரசிக்கலாம்.