காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது. இதில் மன்னனின் மகன் விஜயேந்திரன் மட்டும் தப்பிவிடுகிறார். பல ஆண்டுகள் கழித்து மன்னாக இருக்கும் விஜயேந்திரன் தனக்குப் பிறகு தனது மகன் குலசேகரனுக்கு முடி சூடுகிறார். மீண்டும் காந்தாரா காட்டுக்குள் நுழையும் குலசேகரனால், காட்டைக் காக்கும் பழங்குடி மக்களுக்கும், குலசேகரன் படைகளுக்கு மோதல் ஏற்படுகிறது.
காந்தாரா மக்களின் தலைவனாக இருக்கும் நாயகன் ரிஷப் ஷெட்டி எடுக்கும் முடிவுகள் என்ன? குலசேகரனின் தங்கை கனகவதிக்கும் நாயகனுக்குமான உறவு என்ன? ஈஸ்வர பூந்தோடத்தை நாயகன் எப்படி காப்பாற்றுக்கிறார் என்பதெல்லாம் திகில் பரவ காட்சியாக காட்டியிருக்கிறார் இயக்குனரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி
வனத்திற்குள் வாழும் காந்தாரா பகுதியின் இளைஞராக ரிஷ்ப் ஷெட்டி நடித்திருக்கிறார்.
வனத்தின் அடர்த்தியும், அதில் இருக்கும் ஆபத்தும், அந்த ஆபத்திற்குள் அவர்கள் நம்பும் பஞ்சுருளி தெய்வ நம்பிக்கை என்று வெளியுலகமே தொடர்பில்லாத மனிதர்களாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு அந்த பாத்திரம் கச்சிதமாக பொருந்திப் போகிறது. படம் முழுக்கவே நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். சிவ ரூபமாக மாறும் அந்த காட்சியும், காந்தாரா தெய்வமாக மாறும் நொடியும் சிலிர்க்க வைக்கிறார்.
ருக்மணியை காதல் செய்யும் போதும் தங்களுக்கான துறைமுகத்தை கைப்பற்றும் போதும் காட்சிகளில் பிரமாண்டம் காட்டியிருக்கிறார். நடிகராகவும், இயக்குனராகவும் தன் திறமையை காட்டியிருக்கிறார் ரிஷப்.
கனகவதியாக ருக்மிணி வசந்த். அழகாக இருக்கிறார். படத்தின் கடைசியில், பாங்காரா ரத்தமும், கடப்பாவாசிகள் பாலும் கனகவதியின் உடலில் ஓடுவதால் என்னென்னமோ மாயாஜாலம் செய்கிறார். மிளகு, வணிகம் என மன்னனிற்கும், சக்தி வாய்ந்த கார்னிகா கல்லின் மீது கடப்பர்களுக்கும் ஆர்வம் எனப் புரிகிறது.
ஆனால், ஈஸ்வரன் பூந்தோட்டத்தின் மீது கனகவதிக்கு எதனால் ஆர்வம் என்றே புரியவில்லை. ‘என்னைக் கூட்டிட்டுப் போ’ என நாயகனிடம் சிணுங்கிக் கொண்டேயிருப்பார். கனகவதியின் அண்ணன் குலசேகரனாக நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சிறப்பாக நடித்துள்ளார். பாங்காராவின் மன்னன் விஜயேந்திரனாக ஜெயராம் நடித்துள்ளார்.
ஜெயராமின் ராஜ தோற்றம் அவருக்கு அழகாக இருக்கிறது. இந்த நேரத்தில் தனது மகனின் இயலாமையை கண்டு பொங்கி எழுவதும் ஆனால் வஞ்சகத்தால் உயிழக்கிறார்.
திரைக்கதையாக நேர்த்தியாக இருக்கும் சில படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சொதப்பிவிடும். தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமாக அமைந்த பல படங்கள் திரைக்கதையில் திக்குமுக்காடியதை சமீபகாலங்களிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால் திரைக்கதையிலும், தொழில்நுட்பரீதியாகவும் மிக நேர்த்தியாக வந்திருக்கும் ஒரு படமாக இதனை தாராளமாக சொல்லலாம்.
தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் துல்லியமும், உழைப்பும் படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைக்கிறது.
முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ‘காந்தாரா’வின் உலகத்துக்குள் மெல்ல மெல்ல நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.
திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்பட்டுவிடாதவாறு கவனத்துடன் எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. ருக்மிணி வசந்துக்கு கனமான கதாபாத்திரம். அதற்கு தனது சிறப்பான நடிப்பால் நியாயம் செய்கிறார். அரசனாக வரும் குல்ஷன் தேவய்யா வரும் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு எல்லாம் எரிச்சல் ஊட்டுகிறது. படத்தில் சண்டைக்காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.
க்ளைமேக்ஸ் நெருங்கும் 20 நிமிடங்கள் நம்மை கட்டிப் போட்டு வைத்து விடுக்கிறார் ரிஷப் ஷெட்டி. ஒரு திரைப்படத்திற்கு கடுமையான உழைப்பை போட்டால் படத்தை வெற்றி பெற வைத்து விடலாம் என்பதை காந்தாரா 1 நிருபித்துள்ளது.
அரவிந்த எல் காஷ்யப் ஒளிப்பதிவும், அஜனீஷ் லோக்நாத் இசையும் படத்தை தாங்கும் இரண்டு தூணகளாக மாறியிருக்கின்றன.
காட்சிகளில், ததையில், திரைக்கதையில் மிரட்டியிருக்கும் காந்தாரா சேபடர் 1 அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.