உலகில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசுகள் உள்ளன. இன்றைய தினம் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த ஆய்வுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் தலைசிறந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.
அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.