No menu items!

பல்டி – விமர்சனம்

பல்டி – விமர்சனம்

ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவ ஹரிஹரன் , மற்றும் ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணிக்காக விளையாடுகிறார்கள். ஒரு நாள் பொற்தாமரை அணியுடன் விளையாடி வெற்றி பெற, அந்த அணியின் உரிமையாளர் பொற்தாமரை பைரவாவிடம் செல்வராகவன் இவர்களது புகழ் பரவுகிறது.

அந்த ஊரில் பொற்தாமரை பைரவா செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகிய மூன்று தாதாக்களின் ராஜ்ஜியம் கட்ட பஞ்சாயத்து கந்துவட்டி, கஞ்சா என்று போட்டி பொறாமையில் அடிதடி செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்  நான்கு கபடி வீரர்களை தன் அணிக்காக விளையாட சோடா பாபு கபடி வீரர் குமாரிடம் பேரம் பேச, அதற்குள் பொற்தாமரை பைரவன் தங்கள் அணிக்காக தொகையை கொடுத்து விளையாட ஒப்பந்தமாக்குகிறார். அதன் பின் கபடி விளையாட்டில் பொற்தாமரை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் குவிய, சோடா பாபுவிடம் பிரச்சனை ஏற்படுகிறது.

 பொற்தாமரை குமாரிடம் சோடா பாபுவிடம் இருக்கும் ஒரு நான்கு சக்கர வாகனத்தை மீட்டு வர அனுப்புகிறார். நண்பர்கள் நான்கு பேரும் கடும் சண்டை போராட்டத்திற்கு பிறகு வண்டியை மீட்டு பொற்தாமரையிடம் ஒப்படைக்க, அன்று முதல் பணத்தாசை காட்டி பொற்தாமரை கந்து வட்டி தொழிலுக்குள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்.

 நான்கு பேரும் மூன்று கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதிலிருந்து விடுபட நினைத்தாலும், நண்பர்களுக்கிடையே இருக்கும் வேற்றுமை பெரிய விரிசலாக மாறுகிறது.

இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதல் அவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதை அடிதடியுடன் பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம்.

நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி, வேகமாக செயல்பட்டு வியக்க வைக்கிறார்.

ஷேன் நிகமின் நண்பராக மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார். நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத கதாபாத்திறத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கான முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.

 குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன. அதே சமயம், அனிருத் இசையை கேட்டது போலவும் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. காட்சிகளை தொகுத்த விதம் மிக கூர்மையாக இருந்தாலும், அதில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். செல்வராகவன் மீது அடி விழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் தனது கத்திரி மூலம் தனி கதை சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் தனது அசத்தலான கட் மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்தாலும், அதன் நீளத்தின் மூலம் சற்று சோர்வடைய செய்துவிடுவதையும் மறுக்க முடியாது.

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.

கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்வதோடு, சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் பார்வையாளர்களை திரையோடு கட்டிபோட்டு விடுகிறது.

 பல்டி – திரில்லர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...