No menu items!

கல்விதான் வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் கொடுக்கும் -ஸ்டாலின் அறிவுரை

கல்விதான் வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் கொடுக்கும் -ஸ்டாலின் அறிவுரை

கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழா​வில் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​னார்.

வடசென்னை பகு​தி​யில் பெரம்​பூர் பேப்​பர் மில்ஸ் சாலை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், சிஎம்​டிஏ சார்​பில் முரசொலி மாறன் பூங்​காவை ரூ.8.20 கோடி மதிப்​பில் மறுசீரமைக்​கும் பணி மற்​றும் கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் பெருநகர சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.13 கோடியே 95 லட்​சத்து 20 ஆயிரம் மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு முதல்​வர் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

மேலும், கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் மாநக​ராட்சி சார்​பில் ரூ. 8 கோடியே 65 லட்​சத்து 80 ஆயிரம் செல​வில் கட்​டப்​பட்​டுள்ள இரண்டு பள்​ளிக் கட்​டிடங்​கள், மேம்​படுத்​தப்​பட்ட கால்​பந்து மைதானம் மற்​றும் விளை​யாட்​டுத் திடலை திறந்து வைத்​தார். மேலும், சோமையா தெரு​வில் உள்ள சென்னை மாநக​ராட்சி உயர்​நிலைப் பள்ளி வளாகத்​தில் நிறு​வப்​பட்​டுள்ள திரு​வள்​ளுவர் சிலையை திறந்து வைத்​தார்.

அதே தெரு​வில் ரூ.4.19 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்டு வரும் நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யக் கட்​டு​மானப் பணி​களை​யும் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். கொளத்​தூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

தொடர்ந்​து, பெரி​யார் நகர் விளை​யாட்டு மைதானத்​தில் அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், பயிற்சி முடித்த 126 மாணவ, மாண​வியர்​களுக்கு மடிக்​கணினிகள் மற்​றும் சான்​றிதழ்​களை​யும், 356 மகளிர்க்கு தையல் இயந்​திரங்​கள் மற்​றும் சான்​றிதழ்​களை​யும் வழங்​கி​னார்.

அப்​போது, மாணவர்​கள் மத்​தி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இந்த அகாட​மி​யில் நீங்​கள் பெற்​றிருக்​கும் பயிற்​சி, ஒரு சிறிய தொடக்​கம் தான். இன்று இணை​யம் முழு​வதும் அறி​வுத் தகவல்​கள் கொட்​டிக்​கிடக்​கிறது. நல்ல பயனுள்ள தகவல்​களை பார்த்து உங்​கள் திறமையை மேலும், மேலும் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். கல்விக்கு இடைஞ்​சல் ஏற்​படுத்த, கல்​வி​யி​னால் பெறப்​படும் அறிவைக் கொச்​சைப்​படுத்த பலர் செயல்​படு​கின்​றனர்.

அவர்​களின் எண்​ணம், நீங்​கள் முன்​னேற வேண்​டும் என்​பது கிடை​யாது. கவர்ச்​சி​யான சொற்​களைச் சொல்லி பின்​னுக்கு இழுத்​துக்​கொண்டு செல்​லும் ஒரு சூழ்​நிலையை சிலர் ஏற்​படுத்​துகின்​றனர். எதிர்​காலத்​துக்கு என்ன தேவையோ, அதை நோக்கி நீங்​கள் நடை​போட வேண்​டும். தமிழக மாணவர்​களின் படிப்​புக்கு திரா​விட மாடல் அரசு இருக்​கிறது.குறிப்​பாக நான் இருக்​கிறேன். தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு அடித்​தளம் கல்​வி​யாகும். அதை நீங்​கள் நல்ல முறை​யில் கற்​று, வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும்.

இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் சேகர்​பாபு, மாநக​ராட்சி மேயர் ஆர்​. பிரி​யா, எம்​.பி.க்​கள் கலாநிதி வீரா​சாமி, கிரி​ராஜன், எம்​எல்​ஏக்​கள் தாயகம் கவி, அ.வெற்​றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...