No menu items!

13,000 அடி உயரத்தில் 70 வயது மூதாட்டி சாதனை

13,000 அடி உயரத்தில் 70 வயது மூதாட்டி சாதனை

லீலா ஜோஸ் இவருக்கு வயது 70. அண்மை​யில் துபாய்க்கு சென்​றிருந்த அவர் 13,000 அடி உயரத்​திலிருந்து ஸ்கைடை​விங் செய்​தார்.

இந்​தி​யா​விலிருந்து 70 வயது மூதாட்டி ஒரு​வர் இவ்​வளவு உயரத்​திலிருந்து குதித்து சாதனை படைத்​தது இதுவே முதல்​முறை என்று கூறப்​படு​கிறது.

இதுகுறித்து கல்ப் நியூஸுக்கு லீலா ஜோஸ் அளித்த நேர் காணலில் கூறிய​தாவது: எனது மகன் அனீஸ் பி ஜோஸைப் பார்க்க கடந்த மாதம் துபாய்க்கு வருகை தந்​தேன். அப்​போது அவனிடம் ஸ்கைடை​விங் குறித்த ஆசையை வெளிப்​படுத்​தினேன். எனது நண்​பர்​களும் இந்த வயதில் இது முடி​யாத காரி​யம் என்று எனது கனவுக்கு தடை போட்​டனர்.

இருப்​பினும், எனது மகன் நான் அந்த விஷ​யத்​தில் தீவிர​மாக இருப்​பதை உணர்ந்து அதற்​கான ஏற்​பாடு​களை செய்​தான். துபா​யில் உள்ள ஸ்கைடை​விங் குழுவை அணுகி 13,000 அடி உயரத்​தில் இருந்து குதிப்​ப​தற்கு ஏற்​பாடு செய்​தான். அந்த நாளை மட்​டும் என்​னால் மறக்க முடி​யாது.

மேலிருந்து பார்க்​கும்​போது துபாய் நிலப்​பரப்பு முழு​வதும் தெரிந்​தது. கடலைப் பார்க்​கும்​போது ஏதாவது அசம்​பா​விதம் நிகழ்ந்​தால் கடலில் குதித்து தப்​பி​விடலாம் என்று நினைத்​தேன். ஏனெனில் எனக்கு நன்​றாக நீச்​சல் தெரி​யும். அது ஒரு அழகான தருணம். நம்​ப​முடி​யாத அனுபவம்.

13,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த சாதனைக்கு எனது கணவர் வழங்​கிய ஊக்​கம் தான் மிக முக்​கி​ய காரணம் புதிய விஷ​யங்​களை ஆரா​யும் எனது ஆர்​வத்தை அவர் எப்​போதும் ஆதரிப்​பார். தடை போட மாட்​டார். இது எனது முதல் சாகசம் கிடை​யாது. நான் ஏற்​கெனவே வயநாட்​டில் ஸிப்​லைனிலும், புஜை​ரா​வில் பாராகிளைடிங்​கிலும் பறந்து சாகசம் செய்​துள்​ளேன்.

எனக்கு இரண்டு மகன்​கள். இரண்டு பேரன்​கள். எனது வாழ்க்​கையை போதும் என்ற அளவுக்கு வாழ்ந்​து​விட்​டேன். இனி இருக்​கும் காலம் எல்​லாம் போனஸ்​தான். என் வாழ்​நாள் முழு​வதும் அனுபவிக்க வேண்​டிய நேரம் இது. பயப்​படு​வதற்கு ஒன்​றும் இல்​லை. விண்​வெளிக்​கு செல்​ல​வும் நான் தயா​ராக உள்​ளேன். ஏன் கூடாது?. கனவு காண்​ப​தற்​கு வயது தடை இல்​லை. இவ்​வாறு லீலா ஜோஸ்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...