No menu items!

சாலைகளில் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால்  போலீஸில் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

சாலைகளில் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால்  போலீஸில் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வழக்​கறிஞர் ஸ்டா​லின் ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் மழைநீர் வடி​கால்​கள் அமைக்​கும் பணிக்​காக​வும், மின்​வாரி​யம், கழி​வுநீர், கேபிள் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக​வும் சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது, அந்த பள்​ளங்​களை சரிவர மூடி, சாலையை செப்​பனிடு​வ​தில்​லை. இதனால் வாக​னங்​களில் செல்​வோர் பள்​ளத்​தில் விழுந்து விபத்​தில் சிக்க நேரிடு​கிறது. சில நேரங்​களில் உயி​ரிழப்பு சம்​பவங்​களும் நடக்​கிறது.

குறிப்​பாக, மழைநீர் வடி​கால் பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது வாகன ஓட்​டிகளை எச்​சரிக்​கும் வித​மாக எச்​சரிக்கை பலகைகளோ அல்​லது மாற்று வழித்​தடங்​களோ ஏற்​படுத்​து​வ​தில்​லை. இரவு நேரங்​களில் ஒளிரும் வண்ண ஸ்டிக்​கர்​களை பயன்​படுத்​து​வ​தில்லை என்​ப​தால் முதி​ய​வர்​கள், சிறு​வர்​கள் பள்​ளங்​களில் விழுந்து காயமடைய​வும், இறக்​க​வும் நேரிடு​கிறது.

எனவே, சாலைகளில் பள்​ளம் தோண்​டி​விட்டு சரிவர மூடா​மல் செல்​லும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் மற்​றும் அதி​காரி​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்​கும், உரிய இழப்​பீடு​களை வழங்க தமிழக அரசுக்​கும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன்​பாக நடந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “மழைநீர் வடி​கால் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​கள் காரண​மாக எத்​தனை பேர் இறந்​துள்​ளனர், எத்​தனை பேர் காயமடைந்​துள்​ளனர், எந்​தெந்த பகு​தி​யில் அது​போன்ற நிகழ்​வு​கள் நடந்​துள்​ளது என்​பது குறித்து எந்த விவரங்​களும் தெரிவிக்​காமல் பொத்​தாம் பொது​வாக இந்த மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, மழைநீர் வடி​கால் உள்​ளி்ட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச்​சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தா​ராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம்​” என அறி​வுறுத்​தி வழக்​கை முடித்​து வைத்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...