No menu items!

தங்கத்தின் விலை மீண்டும் எழுச்சி!

தங்கத்தின் விலை மீண்டும் எழுச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.84 எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

கடந்த 20-ம் தேதி தங்கத்தின் விலை ரூ.82,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.83 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று (செப்.23) காலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,500-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,000-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.149-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,49,000-க்கு விற்பனை ஆகிறது.

“அமெரிக்க பெடரல் வங்​கி, வட்டி விகிதத்தை குறைத்​துள்​ளது. இதனால், வங்​கி​யில் வைப்பு வைத்​திருந்​தோர் பார்வை தங்​கத்​தின் மீது திரும்​பி​யுள்​ளது. இதுத​விர, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, புவி​சார் அரசி​யல் நிச்​சயமற்ற தன்​மை​கள் ஆகிய​வற்​றால், தங்​கத்​தின் மீது முதலீடு அதி​கரித்​துள்​ளது.

இதனால், விலை உயர்ந்​துள்​ளது. வரும் நாட்​களில் தங்​கத்​தின் விலை உயரவே வாய்ப்பு உள்​ளது” என்​று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...