No menu items!

திறமையாளர்களை ஈர்க்க  சீனாவில் புதிய K Visa அறிமுகம்

திறமையாளர்களை ஈர்க்க  சீனாவில் புதிய K Visa அறிமுகம்

அமெரிக்கா ஹெச் 1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதே கடினமான ஒன்றாக மாறி வருகிறது. இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் சீனா ஒரு காரியத்தைச் செய்துள்ளது.

உலகெங்கும் உள்ள வல்லுநர்களை ஈர்க்கச் சீனா செய்துள்ள இந்தக் காரியம் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருக்கிறது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி, வேலை செய்வதைக் கடினமாக மாற்றி வருகிறது. வெளிநாட்டினர் மீது டிரம்ப் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். சமீபத்தில் கூட ஹெச் 1பி விசாவின் விண்ணப்பக் கட்டணத்தை டிரம்ப் நிர்வாகம் உயர்த்தி இருந்தது.

சீனா செய்த காரியம்

 இந்தச் சூழலில் தன் சத்தமே இல்லாமல் சீனா புதிதாகத் தனது நாட்டில் K என்ற புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட துறைகளில் உள்ள இளம் திறமையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சீனா வெளியிட்டது.

இந்த புதிய விசா நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி வரும் நேரத்தில் சீனா இப்படியொரு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் H-1B விசா போன்றதாகும். உலகெங்கும் உள்ள திறமையான வல்லுநர்களை ஈர்க்க இந்த விசாவை சீனா கொண்டு வருகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?

உள்நாட்டு அல்லது வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்த STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்றவர்கள் K விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, மேற்கூறிய நிறுவனங்களில் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபட்டுள்ள இளம் நிபுணர்களும் இந்த விசாவைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ஒவ்வொரு துறைக்கும் சீனா குறிப்பிட்ட தகுதிகளை நிர்ணயம் செய்துள்ளது. அதைப் பூர்த்தி செய்யும் அனைவரும் கே விசா கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விசா பெற எந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்த விரிவான பட்டியல் சீன தூதரகங்கள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விசா பெறக் கல்வித் தகுதிக்கான சான்றிதழ் மற்றும் தொழில்முறை அல்லது ஆராய்ச்சிக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.

என்ன சிறப்பு?

சீனாவில் இப்போதுள்ள 12 வகையான விசாகளுடன் ஒப்பிடுகையில், கே விசா குறிப்பிடத்தக்கப் பலன்களை வழங்குகிறது. இந்த விசாவை வைத்திருப்போர் எத்தனை முறை வேண்டுமானாலும் சீனாவுக்குள் வந்து செல்லலாம். மேலும், நீண்ட காலம் செல்லுபடியாகும் என்பதால் விசா புதுப்பித்தல் சிக்கல் இல்லாமல் நீண்ட காலம் சீனாவில் தங்க முடியும்.

சீனாவில் உள்ள தற்போதைய ஒர்க் விசாக்களின்படி ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபருக்குச் சீன நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரால் ஒர்க் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், கே விசாவுக்கு அதுபோல எதுவும் தேவையில்லை. இது விண்ணப்பச் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. சீனாவுக்குள் நுழைந்த பிறகு, கே விசா வைத்திருப்பவர்கள் கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிஸ்னஸை ஆரம்பிக்கலாம். அல்லது நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்யலாம்

முக்கிய மாற்றங்கள்

சீனாவில் வெளிநாட்டினரால் ஈஸியாக வந்து வேலை செய்ய முடிவதில்லை என்ற பேச்சு பரவலாக இருக்கும் சூழலில், அதை மாற்றும் வகையிலேயே இந்தச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகச் சீனா தனது விசா நடைமுறைகளைத் தளர்த்தி வருகிறது. விசா இல்லாமல் சீனாவுக்கு வரும் நாடுகளின் எண்ணிக்கையைச் சீனா ஏற்கனவே 55ஆக உயர்த்தி இருந்தது. இந்த நடவடிக்கைகளால் சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் பாதியில் சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 30% வரை அதிகரித்துள்ளது. இந்த விசா தளர்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாகவே சீனா இந்த புதிய கே விசாவை கொண்டு வந்துள்ளது. அந்தப் பக்கம் டிரம்ப் அரசு விசா நடைமுறைகளைக் கடுமையாக்கும் சூழலில், சத்தமே இல்லாமல் சீனா இந்த மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் பிற விசாக்களை காட்டிலும் K Visa எவ்வாறு சிறந்தது?

தற்போது 12 விதமான விசாக்களை சீனா வழங்கி வருகிறது. இவற்றை காட்டிலும் புதிய K Visa பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் மல்டிபிள் எண்ட்ரி, நீண்ட கால வேலிடிட்டி, சீனாவில் நீண்ட கால இடைவெளியில் தங்கியிருத்தல் போன்ற சலுகைகளை பெறலாம்.

வேலைக்கான விசாக்களை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நாட்டை சேர்ந்த வேலை வழங்கும் நிறுவனத்தின் அழைப்பு தொடர்பான ஆவணங்கள் தேவை. இத்தகைய அம்சம் K Visa-வில் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.

இந்த விசா வைத்திருப்பவர்கள் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் மட்டுமின்றி கல்வி, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்ற விஷயங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதன்மூலம் சீனாவிற்கு திறமையான இளைஞர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சீனாவை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்கிறது. இந்த சூழலில் K Visa சீனாவின் மனித வளத்தை மேலும் சிறப்பானதாக மாற்றி அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...